இந்த சூரணத்தை நீரில் கலந்து குடித்தால்.. வாரக் கணக்கில் வராத மலமும் நொடியில் அடித்துக் கொண்டு வெளியேறும்!!

Photo of author

By Rupa

உடம்பில் அதிகப்படியான கழிவுகள் தேங்கி இருந்தால் நோய் பாதிப்புகள் வரக் கூடும்.இன்று பலர் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதியடைந்து வருகின்றனர்.குடலில் அதிகப்படியான மலக் கழிவுகள் தேங்கினால் அது வாயுத் தொல்லை,மூலம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

எனவே மலச்சிக்கல் பாதிப்பு நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும்.

தேவையான பொருட்கள்:

1)கடுக்காய்
2)நெல்லிக்காய்
3)தான்றிக்காய்

செய்முறை விளக்கம்:

25 கிராம் கடுக்காய்,25 கிராம் நெல்லிக்காய் வற்றல் மற்றும் 25 கிராம் தான்றிக்காய் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ள வேண்டும்.இந்த மூன்று பொருளையும் சேர்த்து அரைத்த பொடியை திரிபலா சூரணம் என்று அழைப்பார்கள்.

இது நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.அரைக்க முடியாதவர்கள் பொடியாக வாங்கிக் கொள்ளலாம்.இந்த சூரணத்தை 10 கிராம் அளவு எடுத்து ஒரு கிளாஸ் வெந்நீரில் கலந்து காலை மாலை என இருவேளை குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

தேவையான பொருட்கள்:

1)ஆவாரம் பூ
2)கடுக்காய் பொடி

செய்முறை விளக்கம்:

50 கிராம் ஆவாரம் பூ பொடி மற்றும் 50 கிராம் கடுக்காய் பொடியை நாட்டு மருந்து கடையில் வாங்கி ஒன்றாக மிக்ஸ் செய்து ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடேற்றவும்.

அதன் பிறகு ஆவாரம் பூ பொடி மற்றும் கடுக்காய் பொடி கலவை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சூடாகி கொண்டிருக்கும் நீரில் கலந்து கொதிக்க வைத்து குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

தேவையான பொருட்கள்:

1)எலுமிச்சை சாறு
2)இஞ்சி
3)ஆமணக்கு எண்ணெய்

செய்முறை விளக்கம்:

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு அதில் இஞ்சி ஒரு துண்டு அளவு இடித்து சேர்க்கவும்.

பிறகு இதை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் இரண்டு அல்லது மூன்று துளி விளக்கெண்ணெய் சேர்த்து குடித்தால் மலக் கழிவுகள் முழுமையாக வெளியேறும்.