இன்னைக்கு நைட் படுத்த உடன் தூக்கம் வர.. பாலில் இதை கலந்து குடிங்க!!

Photo of author

By Divya

இன்னைக்கு நைட் படுத்த உடன் தூக்கம் வர.. பாலில் இதை கலந்து குடிங்க!!

Divya

இன்று பலரும் தூக்கமின்மை பிரச்சனையை அனுபவித்து வருகின்றனர்.நன்றாக உறங்கவில்லை என்றால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.எனவே இனி நன்றாக உறங்க இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கசகசா – ஒரு தேக்கரண்டி
2)அமுக்கிரா கிழங்கு பொடி – ஒரு தேக்கரண்டி
3)பால் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி கசகசா சேர்த்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி அமுக்கிரா கிழங்கு பொடி போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பாலை கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் நன்றாக தூக்கம் வரும்.இந்த பாலை இரவில் தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு பருக வேண்டும்.தொடர்ந்து ஒரு மாதம் இந்த பாலை பருகினால் நன்றாக தூக்கம் வரும்.

தேவையான பொருட்கள்:-

1)பால் – ஒரு கிளாஸ்
2)ஜாதிக்காய் பொடி – ஒரு தேக்கரண்டி
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி ஜாதிக்காய் பொடி சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.

இந்த பால் நன்றாக கொதித்த பின்னர் கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.இந்த பாலில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகினால் நன்றாக தூக்கம் வரும்.

தேவையான பொருட்கள்:-

1)பால் – ஒரு கிளாஸ்
2)பாதாம் பருப்பு – நான்கு

செய்முறை விளக்கம்:-

முதலில் நான்கு பாதாம் பருப்பை லேசாக வறுத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

பின்னர் பாதாம் பருப்பை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை பாலில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.

பின்னர் இதை கிளாஸிற்கு ஊற்றி தேன் கலந்து குடித்தால் நன்றாக தூக்கம் வரும்.