ADMK DMK: சட்டசபையில் பட்ஜெட் தாக்கலானது கடந்த வாரம் முதல் செய்யப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் கடந்து தற்பொழுது வரை மாணவர் மற்றும் மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கவில்லை. இது ரீதியாக தற்பொழுது பட்ஜெட் தாக்குதலில் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் எனக் கூறியுள்ளனர்.
இதற்காக 2000 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை கணக்கிட்டு போட்டு பார்த்தால் மாணவருக்கு தலா பத்தாயிரம் என்ற அடிப்படையில் தான் லேப்டாப் வழங்கப்படும். அப்படி பத்தாயிரம் ரூபாயில் லேப்டாப் தயாரித்தால் தரமானதாக எப்படி இருக்கும் என அதிமுக வின் மாஜி அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பினார். அவருக்கு பதிலளிக்கும் வகையில் தங்கம் தென்னரசு, இந்த ஆண்டு 2000 கோடியும் அடுத்த ஆண்டு 2000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேற்கொண்டு தேவைப்பட்டாலும் நிதி ஒதுக்கி கொள்ளலாம் என்று தெரிவித்ததோடு அதிமுகவிற்கு சில அறிவுரையும் கூறியுள்ளார். அதிமுக மிகவும் கவனமாக இருங்கள், உங்கள் மடியில் உள்ள கணத்தை வேறு ஒருவர் பறிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். எம்ஜிஆர் இருந்த காலத்தில் திமுக மீது பெரும் மதிப்பு இருந்தது. அது மட்டுமின்றி ஸ்டாலின் மீதும் தனி அன்பு வைத்திருந்தார். அந்த வகையில் நீங்கள் ஆரம்ப கட்டத்திலிருந்தே எங்களுடன் அரசியல் களத்தை சகித்து கொண்டுள்ளீர்கள்.
இவ்வாறான சூழலில் உங்களின் கூட்டல் கழித்தல் கணக்குகளை வேறொருவர் மற்றொரு இடத்திலிருந்து செய்து கொண்டிருக்கிறார், அதிலும் அவர்கள் சாணக்கிய தந்திரத்துடன் செயல்படுகிறார்கள் என்று பாஜகவை சுட்டிக்காட்டி பேசினார். இது அனைத்தையும் கூறுவது உங்கள் மீதுள்ள உரிமை என்று இருதியில் கூறியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தங்கமணி, நாங்கள் கூட்டணியிலும் சரி கூட்டல் கழித்தல் கணக்கிலும் சரி ஒருபோதும் ஏமாற மாட்டோம் என்று தெரிவித்தார்.