ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் திறப்பு விழாவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்துகொண்டு திறந்து வைத்ததில் முதலமைச்சரின் மு க ஸ்டாலின் கலந்து கொள்ளாததற்கு காரணம் என்ன என்பது குறித்து அவரே உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சி வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்கள்.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியிருப்பதாவது :-
உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சி கலந்து கொண்டதால்தான் தன்னால் பாம்பன் பாலம் திறப்பு விழாவில் தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்று இதை ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி இடம் தான் தெரிவித்துவிட்டதாகவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்ட பாம்பன் பாலதரப்பு விழாவில் அமைச்சர்களான தங்கம் தென்னரசு மற்றும் ராஜ கண்ணன் இருவரும் தமிழக அரசு தரப்பில் கலந்து கொண்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார். அதோட மட்டுமல்லாமல் நீட் தேர்வு குறித்து பேசிய முதலமைச்சரின் மு க ஸ்டாலின் அவர்கள் அதிமுக ஆட்சி காலத்தில் தான் நீட் தேர்வானது தமிழகத்திற்குள் நுழைந்தது என்றும் கலைஞர் மற்றும் ஜெயலலிதா இருந்தவரில் நீட் தேர்வை தமிழகத்திற்குள் அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
அதிலும் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் இருந்தவரையில் நீட் தேர்வை தமிழகத்திற்குள் நுழையவிட வில்லை என்றும் அவர் இறந்த பின்பு அதிமுகவில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் இருவரும் நீட் நுழைந்து தேர்வினை தமிழகத்திற்குள் நுழைத்துவிட்டதாகவும் நீட் தேர்வினை தமிழகத்திலிருந்து விலக்கு அளித்தால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணிக்கு வருவோம் என அதிமுகவால் சொல்ல முடியுமா என்பது போன்ற கேள்விகளையும் உதகையில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கேட்டு இருக்கிறார்.