இடைத்தேர்தல் தோல்வியால் கலங்கி நிற்கும் மு.க.ஸ்டாலின்! விழிப்பிதுங்கி நிற்கும் உடன்பிறப்புகள்

0
177

இடைத்தேர்தல் தோல்வியால் கலங்கி நிற்கும் மு.க.ஸ்டாலின்! விழிப்பிதுங்கி நிற்கும் உடன்பிறப்புகள்.

விக்கிரவாண்டி,நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததை மு.க.ஸ்டாலின் அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாங்குநேரி தோல்வியை அவர் கண்டுகொள்ளவில்லை அங்கு காங்கிரஸ் தான் போட்டியிட்டது, ஆனால் விக்ரவாண்டி பொருத்தவரை திமுகவிடம் இருந்து அதிமுகவுக்கு சென்றது மிகுந்த பலத்த அடியாகவே கருதுகிறார் மு.க.ஸ்டாலின்.

நாடாளுமன்றத் தேர்தலில் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இடைத்தேர்தல் தோல்வி பல பாடங்களை ஸ்டாலினுக்கு கற்றுக் கொடுத்ததாக தெரிகிறது, நாடாளுமன்றத் தேர்தலில் திமுக,காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தான் பிரதானமாக இருந்தது, அது அனைவராலும் அறியப்பட்டு ஒன்றுதான்,. கடந்த கால தேர்தல் அறிக்கையில் சொன்னப்படி கடன் தள்ளுபடியை திமுகவும் காங்கிரசும் செய்தன,. இதனால் தமிழக மக்கள் நம்பி வாக்களித்தனர், தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் பிஜேபியும் அதன் கூட்டணி கட்சிகளும் அசுர வெற்றியை பெற்றன,. தமிழகம் மட்டும் தனித்து விடப்பட்ட வெற்றி போல் தமிழக மக்களையே சிந்திக்கும் வகையில் இருந்தது,.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ள முடியாமல் போனதால் திமுக கடும் கலக்கத்திலேயே இருந்தது, அடுத்த தேர்தலில் என்ன சொல்லி சமாளிக்க போகிறோம் என்று தெரியாமல் விழிப்பிதுங்கியது,.

சட்டமன்றத்தில் முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் திமுக தேர்தல் அறிக்கையை கடுமையாக விமர்சித்து பேசினார், குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றி கடத்துவது போல் இந்த தேர்தலில் வெற்றியை திமுக பெற்றனர் என்று தமிழக மக்களை யோசிக்க வைக்கும் அளவில் பேசி திமுகவை கலங்க வைத்தார், இதன் தொடர்ச்சியாக வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, அப்போதைய காலகட்டத்தில் காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவை நீக்கியது, முத்தலாக் தடைச்சட்டம் விளைவாக முஸ்லிம் சமுதாய வாக்குகள் பாஜக கூட்டணியில் இருந்ததால் அதிமுகவிற்கு வாக்களிக்கவில்லை, இதனால் முஸ்லிம் சமுதாய வாக்குகள் அனைத்தும் திமுகவிற்கு விழுந்ததால் கதிர்ஆனந்த் வெற்றி பெற்றார், இதில் 3 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுகவும் 3 சட்டமன்ற தொகுதிகளில் திமுகவும் முன்னிலை பெற்றன, இந்த முடிவுகள் ஸ்டாலினை திகைத்து போய் வைத்தன.

தனது மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி தலைவர் பதவியை இத்தகைய சூழ்நிலையில் கொடுத்தது திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது,. அனைவரும் குடும்ப வாரிசு கட்சி என்று திமுக மீது கடுமையான விமர்சனங்களை வைத்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில்,. எதிர்கட்சிகள் இதனை வைத்து அரசியல் செய்ய வழிவகுத்த விட்டார் என திமுக உடன்பிறப்புகள் புலம்பி வருகின்றனர்,.

வன்னியர்களுக்கு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 20 சதவீத ஒதுக்கீட்டில் 15 சதவீதம் உள்ஒதுக்கீடு தரப்படும் என்ற மு.க.ஸ்டாலின் கூற்றை விக்கிரவாண்டியில் உள்ள வன்னியர்கள் நம்பவில்லை,. காரணம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திமுக மாவட்டச் செயலாளர்களில் ஒருவர் கூட வன்னியர் இல்லை என்பதுதான்,. திமுக வன்னியர் பிரமுகர்களை வைத்து பலமான பிரச்சாரம் செய்தும் பயனில்லாமல் போனது,.

திருமாவளவனை கூட்டணியில் வைத்துக்கொண்டு செயல்படுவதால் வாக்குகள் விழாது என்று திமுக வன்னியர்களே தலைமையிடம் சொல்லியதாகவும் இதனை பொன்முடி கண்டுகொள்ளாமல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று ஸ்டாலினுக்கு நம்பிக்கையூட்டி ஏமாற்றியதால் அவர் மீது கடுமையான எரிச்சலில் ஸ்டாலின் உள்ளார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Previous articleதோலுக்கு மினு மினுப்பு மற்றும் பொலிவை தரும் சைவ உணவுகள்!
Next articleவிவசாயிகளுக்கு தமிழக அரசு சிறப்பு சட்டம்! மகிழ்ச்சி தரும் சிறப்பு செய்தி