திமுக தலைமை வெளியிட்ட திடீர் அறிவிப்பு! அதிர்ச்சியில் மாவட்டச் செயலாளர்கள்!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதை தொடர்ந்து, தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை பரபரப்பாக இருக்கிறது.இந்த சட்டசபை தேர்தலுக்கான மனு தாக்கல் எதிர்வரும் 12ஆம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது.சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் மதிமுக,விசிக,காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு, மக்கள் தேசிய கட்சி ஆகிய .கட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.

இந்தக் கூட்டணியில் நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு முடிக்கப்பட்டு இருக்கிறது.ஆகவே காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும்,அதோடு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.விடுதலை சிறுத்தைகள் கட்சி ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,மதிமுக ,ஆகிய கட்சிகளுக்கு தலா ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா மூன்று இடங்களும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இன்றையதினம் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கின்ற தொகுதிகளில் விவரம் மற்றும் வேட்பாளர் பட்டியலை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், மார்ச் மாதம் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பிரச்சாரத்தில் இறங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.அந்தப் பிரச்சாரம் தற்சமயம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.இந்த அறிவிப்பு திமுகவினர் இடையே அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. திண்டுக்கல்,கரூர்,நாமக்கல்,சேலம்,மதுரை போன்ற பகுதிகளில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் நெருங்கிக் கொண்டே வரும் காரணத்தால்,ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.இதன் காரணமாக,சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக திமுகவின் தலைமை அறிவித்திருக்கிறது.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார் என்ற தகவலை தொடர்ந்து அந்த கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் பெரிய அளவில் வரவேற்பு வழங்க தொகுதிகளை தயார் செய்து வைத்திருந்தார்கள்.திடீரென்று இந்த பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்பது அந்த கட்சியினர் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கி இருப்பதாக கூறுகிறார்கள்.