பிடிகொடுக்காத திமுக! கமல்ஹாசனுக்கு சிக்னல் கொடுத்த தேமுதிக!

0
121

நேற்றைய தினம் அதிமுக கூட்டணியில் இருந்த விஜயகாந்தின் தேமுதிக கட்சி தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அந்த கூட்டணியில் இருந்து வெளியேறியது. தேமுதிக தனக்கு 26 தொகுதிகள் வேண்டும் என்று அதிமுகவிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் தமிழகத்தில் தேமுதிகவின் வாக்கு வங்கியை கணித்து வைத்திருக்கிற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

அதன் காரணமாக பலகட்டப் பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர் அதிமுக சார்பாக அந்த கட்சிக்கு 12 தொகுதிகள் அதிகபட்சமாக கொடுக்கலாம் என்று அதிமுக தெரிவித்தது. இதனையும் ஏற்றுக் கொள்ளாத தேமுதிக தலைமை தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வந்தது.இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் அந்தக் கட்சியின் தலைவர் நடிகர் விஜயகாந்த் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் உடன் ஏற்பட்ட ஆலோசனையில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறுகிறது என்று தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய தேமுதிக அதிமுக கூட்டணிக்கு செல்ல இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியது. அதாவது திமுக சார்பாக அமைக்கப்பட்டிருக்கும் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் டி.ஆர். பாலுவிடம்  அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எல்கே சுதீஷ் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் இதனை அறிந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் பாலுவிடம் திமுக சார்பாக அந்த கட்சிக்கு எந்த ஒரு நம்பிக்கையும் அளிக்க வேண்டாம் என்று கறாராக தெரிவித்து விட்டதாக தெரிய வந்திருக்கிறது.

கடந்த 2016 ஆம் வருடத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் பொழுது திமுக தேமுதிக எப்படியாவது தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று முயற்சி செய்தது. அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி பழம் பழுத்து கொண்டு இருக்கிறது என்பது போல கவிதைகளையும் எழுதி தேமுதிகவை கவர்வதற்கு முயற்சி செய்தார். ஆனாலும் அவருடைய முயற்சி பலிதம் ஆகவில்லை முடிவு 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது தேமுதிக தலைமையில் மக்கள் நல கூட்டணி என்ற புதிய கூட்டணி உருவானது.

ஆனால் திமுக விஜயகாந்தை தன்னுடைய கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று பலமுறை முயற்சி செய்து பார்த்தது. ஆனாலும் அந்தக் கட்சியின் முயற்சி வெற்றி பெறவில்லை என்பதால் கடுமையான கோபத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது.இதையெல்லாம் நினைத்துப் பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின் டி.ஆர். பாலுவிடம் எக்காரணம் கொண்டும் தேமுதிகவை நம்முடைய கூட்டணிக்குள் சேர்த்து விடக்கூடாது என்று கறாராக உத்தரவிட்டு விட்டாராம் இதனால் தேமுதிக வருத்தம் அடைந்திருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

ஆனால் தேமுதிகவிற்கு கடைசி வாய்ப்பாக ஒரு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள் .அதுதான் கமல்ஹாசன் தலைமையிலான கூட்டணி தற்போது கமல்ஹாசன் சரத்குமார் மற்றும் ரவி பச்சமுத்து ஆகியோர் ஒன்றிணைந்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த கூட்டணியில் மனம் ஒத்த கருத்துடைய நபர்கள் இணையலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது .ஆகவே அடுத்தபடியாக அந்தக் கூட்டணிக்கு செல்வதற்கு தேமுதிக முயற்சி செய்யும் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் அந்த கூட்டணியில் தேமுதிக சென்றால் அந்த கட்சியின் வெற்றி வாய்ப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்பதை தெளிவாக கூற இயலவில்லை. வெறும் 2 சதவீத வாக்குகளை வைத்துக்கொண்டு 26 தொகுதிகள் கேட்கும் தேமுதிக தற்போது கமல்ஹாசனின் கூட்டணியில் இணைந்தால் நிச்சயமாக அந்த கட்சியின் வாக்கு வங்கி மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

இருந்தாலும் தேமுதிகவிற்கு வேறு வழியும் கிடையாது .ஆகவே நிச்சயமாக அடுத்தபடியாக கமல்ஹாசன் கூட்டணிக்கு செல்வதற்கு தான் அந்த கட்சி முயற்சி செய்யும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அப்படி அந்த கட்சி கமல்ஹாசன் கூட்டணிக்கு சென்றால் ஆளும் கட்சியான அதிமுகவிற்கும் எதிர்கட்சியான திமுகவிற்கும் கமலஹாசன் தலைமையிலான கூட்டணி நெருக்கடி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது