பரபரக்கும் திமுகவில் சரியான நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்..!

Photo of author

By Parthipan K

பரபரக்கும் திமுகவில் சரியான நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்..!

10 வருடம் கழித்து திமுக ஆட்சியை பிடித்தது.இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு நாலாபக்கமிருந்தும், எதிர்க்கட்சிகளால் விமர்சனங்கள் கூடி வரும் நிலையில், சொந்த கட்சிக்குள்ளேயே தர்மசங்கடங்களும் அதிகரித்து வருவதை கண்ட ஸ்டாலின் வார்னிங் ஒன்றை தன் கட்சி நிர்வாகிகளுக்கு பிறப்பித்திருந்தார்.முதல்வர் இப்படி அறிவுறுத்திருத்த நிலையில் வெகுசீக்கிரத்தில் சர்ச்சைகள் அமைச்சர்கள் மீது வெடித்தது…

இதனை தொடர்ந்து அமைச்சர்கள் யார் மீதெல்லாம் புகார்கள், சர்ச்சைகள் எழுகிறதோ, அவைகள் விசாரிக்கப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கை தயவுதாட்சண்யம் இல்லாமல் எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார் ஸ்டாலின்.

ஆனால், ஸ்டாலினின் கரிசனம், கனிவு மனப்பான்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், குறிப்பிட்ட அமைச்சர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கபடவில்லை.இதனால், அமைச்சரவையில் விரைவில் மாற்றம் என்று கூறிய ஸ்டாலின் அவர்கள்தற்போதுவரை அமைச்சரவையும் மாற்றப்படவில்லை.

ஊரக உள்ளாட்சியையும், நகர்ப்புற உள்ளாட்சியையும் இணைத்து உள்ளாட்சி துறை அமைச்சராக்ககாவும் உதயநிதியை திமுகவில் அமைச்சராக்க வேண்டும் என திமுகவில் பலர் விரும்புவதால், அதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கிறது. 

இதற்காக, அமைச்சர் நேருவின் நகர்ப்புற வளர்ச்சித்துறையை உதயநிதிக்கு தந்துவிட்டு, நேருவுக்கு வேறு இலாகா ஒதுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு நேருவும் ஓகே சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் நேரு பேசும்போது, எம்எல்ஏக்களை அடிமைகள் என்று விமர்சித்து பேசியிருந்தார்.நேரு இப்படி பேசியது, மேடையில் இருந்த பொன்முடி உட்பட பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் நேரு மீது இப்பொழுது புது சர்ச்சை ஒன்று வெடித்து இருக்கும் நிலையில் நேருவின் பேச்சுக்கு, அதே மேடையில் பொன்முடி அழித்த பதில் நேருக்கு பதிலடியாக இருந்தது.

மேலும், பொன்முடியின் இந்த சமாளிப்பையும், சமாதானத்தையும் கண்டு, எம்எல்ஏக்கள் பலரும் ஆச்சரியப்பட்டனர். ஸ்டாலின் காதுக்கு இதை நீங்கள் தான் கொண்டு போகனும்’ என்று கோரிக்கை வைத்துள்ளார் பொன்முடி.

நேருவின் இயல்பை மாத்திக்கச் சொல்லி அவரிடம் அறிவுறுத்துங்கள்’ என பொன்முடி ஸ்டாலினிடம் கோரிகைவைத்துள்ளார்…இதுகுறித்து ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொன்முடி அறிவுறுத்துகிறார்..