கொள்ளை கூட்டத்தின் தலைவன் எடப்பாடி! மு.ஸ்டாலின் கடுமையான பிரச்சாரம்

Photo of author

By Parthipan K

கொள்ளை கூட்டத்தின் தலைவன் எடப்பாடி! மு.ஸ்டாலின் கடுமையான பிரச்சாரம்

Parthipan K

Updated on:

கொள்ளை கூட்டத்தின் தலைவன் எடப்பாடி! மு.ஸ்டாலின் கடுமையான பிரச்சாரம்

விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட கடையம் பகுதியில் இன்று மாலை திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக இடைத்தேர்தல் பிரச்சாரம் செய்த மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்களை கடுமையாக சாடினார்.

மறைந்த விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக ராதாமணி அவர்கள் சட்டமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதாகவும், அமைச்சர்களே அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதுவும் பேச மாட்டார்கள், அந்த அளவுக்கு சிறப்பாக அவர் பேசுவார்,

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வன்னியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தனியாக உள் ஒதுக்கீடு கொடுக்கப்படும் என்றும், தலித் சமுதாயத்திற்கு 16 சதவீதமாக இருந்த இட ஒதுக்கீட்டை 18 சதவீதமாக உயர்த்தியது கலைஞர் தான் என்றும் கூறினார்.

எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கோதாவரி காவேரி இணைப்புத் திட்டம், நந்தன் கால்வாய் திட்டம் செயல்படுத்தி அனைவரும் வீட்டுக்கும் தண்ணீர் நேரடியாக தரப்படும் என்று போலிச்சாமியார் போல் பொய் கூறுகிறார்.

தமிழகத்தில் 32 அமைச்சர்கள் இருக்கின்றார்கள் அவர்கள் அமைச்சர்கள் அல்ல அது ஒரு கொள்ளைக் கூட்டம், அந்த கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் எடப்பாடி பழனிச்சாமி, அவர்கள் ஏரி கால்வாய்களை தூர்வாருகிறார்கள் என்ற பெயரில் கொள்ளை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது தூர்வாராத ஏரி குளங்களை கணக்கு காட்டி கொள்ளை அடிக்கும் நிகழ்வு தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இல்லை, ஜெயலலிதாவுக்கு நான் முதலமைச்சராக வாக்களித்தார்கள் அதுவும் ஒரு புள்ளி 1.1 வாக்கு சதவீதம் மட்டும்தான், மயிரிழையில் வெற்றி வாய்ப்பை திமுக தவறிவிட்டது, என்றும் அதுவும் சசிகலா காலில் விழுந்து தழுவி முதலமைச்சர் பதவியை பெற்றார் என்று கடுமையாக தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமியை சாடினார்.