திரைத்துறை சூரியன் நண்பர் ரஜினிக்கு வாழ்த்துக்கள்-முதல்வர் ஸ்டாலின்.!!

0
159

‘தாதா சாகேப் பால்கே’ விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமா விருதுகளில் மிக உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு இன்று வழங்கப்பட்டது. இதுவரை தமிழ் திரைத்துறையில் இயக்குனர், கே‌.பாலச்சந்தர், நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இந்த விருதை பெற்றுள்ளார்.

இந்த விருதை பெற்ற பிறகு நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, இந்த விருதை பெறுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும், மேலும், என்னை உருவாக்கிய கே.பாலச்சந்தர் சாருக்கு இந்த விருதை அர்ப்பணிக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், என்னை அடையாளம் காட்டிய நண்பர் பகதூருக்கு நன்றி என்றும், என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் ரசிகர் மக்களுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “திரைத்துறையின் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது பெறும் அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். திரைவானின் சூரியன் ரஜினி அவர்கள் தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று உலக அளவிலான பல விருதுகளை பெற வேண்டும் வாழ்த்துக்கள்.” என தெரிவித்துள்ளார்.

Previous articleமுன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆஜர்! தொடங்கியது லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணை! 
Next articleBREAKING: அந்தரத்தில் தொங்கும் இவர்களது பதவி!ஸ்டாலினின் அடுத்த அதிரடி!