நடைபயிற்சி சென்றபோது அமைச்சரின் செல்போனை திருடிய புள்ளீங்கோ! பாதுகாப்பு அதிகாரி இருந்தும் பாதுகாப்பு இல்லை!!
புதுச்சேரி கடற்கரை சாலையில் தனது பாதுகாப்பு அதிகாரியுடன் வாக்கிங் சென்ற அமைச்சரின் செல்போனை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
புதுவை அமைச்சர் கமலக்கண்ணன் உடல் ஆரோக்கியத்திற்காக இரவு நேரங்களில் வாக்கிங் செய்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல இரவு நடைபயிற்சியை முடித்துவிட்டு தனது பாதுகாப்பு அதிகாரியுடன் வீடு திரும்பிச் சென்று கொண்டிருந்தார். திடீரென அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியின் கையில் இருந்த செல்போனை இருசக்கர வாகனத்தில் வந்த திருட்டு புள்ளீங்கோ பறித்துக் கொண்டு சிட்டாக பறந்து சென்றனர்.
இதனையடுத்து சிசிடிவி கேமரா மூலம் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். திருடர்கள் பறித்துச் சென்ற தொலைபேசி அமைச்சர் கமலக்கண்ணன் அவர்களுடையதாகும். ஒரு அமைச்சருக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் நிலை என்னவாக இருக்கும் என்று பலரும் அச்சத்துடன் திகைத்துப் போயுள்ளனர். தமிழகத்திலும் இதுபோன்ற திருட்டு வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.