இந்த 2 கோடியை MLA-க்கள் செலவு செய்யலாம்!! அமைச்சர் துரைமுருகனின் அதிரடி உத்தரவு!!
சட்டமன்ற கூட்டத்தொடரானது கடந்த 20ஆம் தேதி தொடங்கி தினந்தோறும் பட்ஜெட் குறித்த விவாதமானது நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவாகாரம் குறித்து எதிர்க்கட்சியானது சட்டப்பேரவையில் எதிர்ப்பு தெரிவித்து அமலியிலும் ஈடுபட்டும் வருகின்றனர்.இருப்பினும் பட்ஜெட் குறித்த அறிவிப்புக்களும் வெளியாகி வருகிறது.அந்த வகையில் தொகுதி செலவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை அந்தந்த எம்எல்ஏ-க்களே பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் தொகுதிகளின் மேம்பாட்டு பணிக்காக மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதனை அதற்குரிய திட்டங்களில் 2 கோடி வரை செலவிடவும் மேலும் 1 கோடியை அரசு கூறும் திட்டத்திற்கு பயன்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.அதுமட்டுமின்றி எம்எல்ஏக்கள் தொகுதி வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும் திட்டங்களுக்கு ஜிஎஸ்டி நீக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உடல்நலக்குறைவால் இருப்பதாக தெரிவித்ததோடு அவர்களின் மருத்துவத்திற்கு பணம் தேவை குறித்தும் எம்எல்ஏ-க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேற்கொண்டு இதனை முதல்வர் பார்வைக்கு எடுத்து செல்வதாக துரைமுருகன் கூறியுள்ளார்.பல தொகுதிகளில் முறையான சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி போன்றவை இல்லாமல் தற்போது வரை மக்கள் குற்றம் சாட்டி தான் வருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் இதன் அவலத்தை நாம் காணொளி வாயிலாக பார்த்து வருகிறோம்.அந்த வகையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கையில் இருக்கும் பணம் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சிக்காக பயன்படுகிறதா என்பது சந்தேகமான ஒன்றுதான்.அரசிற்கு கணக்கு காட்ட பல நலத்திட்டங்களை செய்தது போல பாவனைகள் மட்டும் செய்ய உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.