ம.நீ.ம கட்சி துணை தலைவருக்கு திமுகவில் முக்கிய இடம்! அதிர்ச்சியில் கட்சி உறுப்பினர்கள்!
சட்டமன்ற தேர்தலானது கடந்த இரு மாதங்களுக்கு முன் நடந்தது.இம்முறை தேர்தலானது விறுவிறுப்பாக நடைபெற்றது.கட்சியின் இரு மூத்த தலைவர்கள் இன்றி நடைபெறும் முதல் தேர்தல் இதுவே ஆகும்.கொரோனா காலக்கட்டத்திலும் இம்முறை பிரச்சாரத் திருவிழா வெகு சிறப்பாகவே நடைபெற்றது.அதனையடுத்து கமல்ஹாசனும் மற்ற கட்சிகளுக்கு இணையாக போட்டி போட்டு வாக்குகளை சேகரித்தார்.
தெருக்களில் நடந்தும்,பேருந்துகளில் சென்றும் மற்றும் ஆட்டோவில் பயணித்தும் மக்களை கவர மற்ற அரசியல்வாதிகளை போலவே இவரும் செயல்பட்டார்.இவருக்கு எதிராக பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிட்டார்.இருவருக்கிடையே சரியான போட்டி நிலவியது.அதுமட்டுமின்றி கமல்ஹாசனை ஆதரித்து சுகாசினி மற்றும் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் சாலையில் நடனமாடியது அனைவருக்கும் வியப்பளிக்கும் விதமாக இருந்தது.
தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில் கமல்ஹாசன் 1200 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.மக்கள் நீதி மய்யம் தோல்வியை சந்தித்ததும் கட்சியிலிருந்து ஒவ்வொருவராக விலகினர்.முதலாவதாக மக்கள் நீதி மய்யத்தில் துணை தலைவர் மஹேந்திரன் கட்சியிலிருந்து விலகினார்.அவரிடம் பத்திரிக்கையாளர்கள் ஏன் கட்சியை விட்டு விலகுகிறீர்கள் என பல கேள்விகளை எழுப்பினர்.அதற்கு மஹேந்திரன் கூறியதாவது,கட்சியில் ஜனநாயகம் இல்லை.கமல் கூறுவது தான் அனைவரும் கேட்க வேண்டும் என்ற ஆதிக்கம் அதிகாமாக உள்ளது.அதனால் கட்சியை விட்டு விலகுவாதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இவர் விலகியதும் கட்சியின் முக்கிய பொறுப்பிலிருந்த முருகானந்தம்,பத்ம பிரியா,மவுரிய,பொன்ராஜ் போன்றவர்களும் கட்சியிலிருந்து ராஜினாமா செய்தனர்.
இதனையடுத்து தற்போது ம.நீ.ம கட்சியின் முன்னாள் துணைத்தலைவர் மஹேந்திரன் நாளை,மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.முதல்வரை நேரில் சந்தித்து திமுகவில் இணையப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.ம.நீ.ம கட்சியின் முன்னாள் துணைத்தலைவரை கட்சியில் இணைத்து முக்கிய பொறுப்பில் அமர்த்தப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் தான் உள்ளது.அவ்வாறு முக்கிய பொறுப்பில் அமர்த்தினால் கட்சியின் தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்கள் பெருமளவு கண்டனம் தெரிவிக்க வாய்ப்புகள் உள்ளது.நாளை என்ன நடக்க போகிறது என்பதை நாம் அனைவரும் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.