சேலம் மத்திய சிறையில் அதிகாரிகள் திடீர் சோதனை! செல்போன்கள் பறிமுதல்

0
523
#image_title

சேலம் மத்திய சிறையில் அதிகாரிகள் திடீர் சோதனை! செல்போன்கள் பறிமுதல்

 

தமிழகத்தில் உள்ள சிறைகளில் மிகவும் பிரபலமான சிறை சேலம் மத்திய சிறை. இங்கு சுமார் 950 கைதிகளுக்கு மேல் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த சிறை அவ்வப்போது சில சர்ச்சைகளில் சிக்குவதும் வழக்கமான ஒன்று. கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் தரும் உணவு பொட்டலங்களில், செல்போன், சார்ஜர், கஞ்சா, பீடி சிகரெட், போன்ற பொருட்களை கொடுத்து மாட்டிக்கொள்வதும் உண்டு.

 

அவ்வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் விசாரணை கைதி ஒருவரின் அறையிலிருந்து செல்போன் ஒன்றை சிறை காவலர்கள் பறிமுதல் செய்த போது காவலர்களுக்கும் கைதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் குறித்து சிறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

 

சிறை கண்காணிப்பாளர் அளித்த புகாரினை தொடர்ந்து, சேலம் மாநகர காவல் துணை ஆணையர் மாடசாமி தலைமையில் 30திற்கும் மேற்பட்ட காவலர்கள் இன்று காலை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

 

இன்று விடியற்காலை 6மணிக்கு தொடங்கி சோதனையானது சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்திருந்தது. இந்த சோதனையின் போது ஒவ்வொரு அறையாக சோதனை மேற்கொண்டனர் அப்போது, கைதிகள் மறைத்து வைத்திருந்த கஞ்சா, செல்போன், சார்ஜர், மற்றும் குழி தோண்ட பயன்படுத்த படும் சிறிய இரும்பு கம்பிகள், உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

 

கைப்பற்றப்பட்ட பொருட்கள் எப்படி யார் மூலியமாக உள்ளே வந்தது, சிறை காவலர்கள் இதற்கு உடந்தையாக இருந்தனரா என்ற பல்வேறு கோணங்களில் போலிசார் விசாரித்து வருகின்றனர்.

 

சிறை முழுவதும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் கடந்த சில நாட்களாக பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு, காவல் துணை ஆணையர் மாடசாமி தலைமையிலான போலிசார் சிறை காவலர்கள் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த அதிரடி ஆய்வினால் மத்திய சிறை வளாக பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Previous articleஒரு தலை காதல் விபரீதம்! நர்சிங் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்! 
Next articleஇந்த மாவட்டத்தில் ட்ரோன் பறக்க கூடாது? அதிரடி தடை விதித்த காவல்துறை!