ஒரு தலை காதல் விபரீதம்! நர்சிங் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்! 

ஒரு தலை காதல் விபரீதம்! நர்சிங் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்! 

காதலிக்க மறுத்ததால் நர்சிங் மாணவி இளைஞரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அருகே  ராதாபுரம் என்ற கிராமத்தை சேர்ந்த சுகன் என்பவரது மகள் தரணி வயது 19. இவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் நர்சிங் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார்.

தரணியின் வீடு அருகே உள்ள காலி நிலத்தில் தோட்டம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தரணி தனது வீட்டு தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருந்த போது அங்கு மறைந்திருந்த வாலிபர் ஒருவர் திடீரென தரணியின் பின்பக்கமாக வந்து அவரைப் பிடித்து அவரது கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடினார். இந்த சம்பவத்தில் தரணி அதே இடத்தில் துடிதுடித்து மரணம் அடைந்தார்.

தரணியின் கூச்சல் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் தோட்டத்தில் ஓடி வந்து பார்த்த பொழுது அங்கு அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு சம்பவம் குறித்து தகவல் அளித்தனர். அங்கு விரைந்து வந்த விக்கிரவாண்டி போலீசார் தரணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த இளைஞரையும் பிடிப்பதற்கு தேடுதல் வேட்டை நடத்தினர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தரணி கணேஷ் வயது 25 என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். கணேஷ் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானதால் தரணி அவரிடம் பழகுவதை தவிர்த்து விலகி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே கணேஷ் தரணியை கொலை செய்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் தப்பியோடிய கணேசை 2 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீட்டில் இருக்கும் பொழுது மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.