பிரதமர் மோடியுடன் தொலைப்பேசியில் பேசிய மு.க.ஸ்டாலின்! கூட்டணி குறித்து பேசப்பட்டதா?

Photo of author

By Parthipan K

பிரதமர் மோடியுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைப்பேசியின் வாயிலாக பேசியது அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதுகலை மருத்துவ படிப்பில் ஓபிசி வகுப்பினர்க்கு இட ஒதிக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக,பாமக,திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசு அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி வகுப்பினர்க்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டு வர வேண்டும்.இட ஒதிக்கீடு வழங்க சட்டரீதியாகவோ,அரசியல் அமைப்பு ரீதியாகவோ எந்தவொரு தடையும் இல்லை,உச்சநீதி மன்றம் தான் முடிவெடிக்க வேண்டும் என்ற இந்திய மருத்துவ கவுன்சில் வாதத்தை ஏற்க இயலாது மேலும் இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு இந்திய மருத்துவக் கவுன்சில் உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைத்து 3 மாதங்களில் முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைப்பேசியில் பேசியதாக தகவல் வெளியானது.இது தொடர்பாக மு.க தனது டுவிட்டர் பக்கத்தில் ஓபிசி இடஒதுக்கீடு குறித்து கடிதம் எழுதிய நான் இதற்கு அடுத்தகட்டமாக பிரதமர் நரேந்திர மோடியுடன் ஓபிசி இடஒதுக்கீடு குறித்து பேசினேன். முன்னுரிமை மற்றும் மாநில இடஒதுக்கீடு சட்டங்களை அரசு ஆதரிக்க வேண்டும் என்று நான் அவரை வலியுறுத்தினேன். பாதுகாப்பற்றவர்களை நாம் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

இருப்பினும் தமிழகத்தில் அடுத்த வருடம் வர இருக்கும் சட்டமன்றத் தேர்தல் குறித்தும், பாஜகவுடனான திமுக கூட்டணி தொடர்பாகவும் பேசப்பட்டிருக்கலாம்,அண்மைக்காலங்களில் மு.க ஸ்டாலின் பாஜக மீது கடுமையான விமர்சனம் வைக்காதற்கும் காரணம் அதுதான் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.