குடும்ப அரசியல் என விமர்சனம் செய்த மோடி!! நெத்தியடி பதில் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!! 

Photo of author

By Amutha

குடும்ப அரசியல் என விமர்சனம் செய்த மோடி!! நெத்தியடி பதில் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!! 

Amutha

Modi criticized as family politics!! Chief Minister Stalin responded with a forehead slap!!

குடும்ப அரசியல் என விமர்சனம் செய்த மோடி!! நெத்தியடி பதில் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!! 

தமிழ்நாடு அரசியலை குடும்ப அரசியல் என விமர்சனம் செய்த பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் கும்மிடிப்பூண்டி வேணு இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது மணமக்களை வாழ்த்தி பேசிய   முதல்வர் ஸ்டாலின் பிரதமர் கூறிய குடும்ப அரசியல் என்ற விமர்சனத்திற்கு பதில் கூறினார். அதில் அவர் கூறியதாவது,

இப்போது எல்லாம் நல்லது செய்வதை கூட பயந்து செய்ய வேண்டி இருக்கிறது. நல்லதை கூட ஜாக்கிரதையாக, பொறுமையாக பலமுறை, யோசித்து செய்ய வேண்டி உள்ளது. நிறைய பேருக்கு வரலாறு புரியவில்லை. நாட்டின் பிரதமராக இருப்பவருக்கே சரியான வரலாறு தெரியவில்லை.

திமுக என்பது குடும்ப இயக்கம். தன் தொண்டர்களை தம்பி என அழைத்தவர் அண்ணா. திமுகவிற்கு வாக்களித்தால் கருணாநிதி குடும்பம் தான் வளர்ச்சி அடையும் என பிரதமர் மோடி கூறுகிறார். அவர் சொல்வது உண்மைதான் கருணாநிதி குடும்பம் என்பதை தமிழ்நாடு தான். திமுகவினர் அனைவரும் கருணாநிதியின் மகன் போன்றவர்கள் தான். எனவே  திமுக என்பது ஒரு குடும்பம் போன்றது தான்.

திமுக மாநாடு நடத்தும்போதெல்லாம் குடும்பமாக மாநாட்டிற்கு வாருங்கள் என்று சொல்லி தான் அழைப்போம். மாநாட்டிற்கு மட்டுமல்ல போராட்டத்திற்கும் கூட குடும்பமாக மக்கள் கலந்து கொள்வது தான் திமுக.

பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சி கூட்டத்தால் பிரதமர் மோடிக்கு பயம் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு பின் ஏற்பட்ட பயத்தினால்தான் மோடி இறங்கி வந்து பேசி வருகிறார். மணிப்பூர் வன்முறையால் பற்றி எரிந்து கொண்டிருந்த நிலையில் பிரதமர் மோடி அந்த பக்கமே செல்லவில்லை.

மத்தியில் சிறப்பான மதசார்பற்ற ஆட்சி உருவாக நாம் தயாராக வேண்டும். எனவே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு பொதுமக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நெத்தியடியாக பதில் கூறியுள்ளார்.