மோடி :500 விவசாயிகள் எனக்காகவா உயிரை இழந்தனர்? பிரதமரின்  திமிர்  பேச்சால் கொந்தளிக்கும் பொதுமக்கள்!

Photo of author

By Rupa

மோடி :500 விவசாயிகள் எனக்காகவா உயிரை இழந்தனர்? பிரதமரின்  திமிர்  பேச்சால் கொந்தளிக்கும் பொதுமக்கள்!

நமது இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. மூன்று வேளாண் சட்டங்களை கைவிடுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.இதில் பல விவசாயிகள் மத்திய அரசு செவி கொடுக்காததால் தற்கொலை செய்து கொண்டனர். அவ்வாறு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட போதெல்லாம் கலவரம் வெடிக்க தொடங்கியது. தற்பொழுது பிரதமர் மோடி அவர்கள் அந்த 3 வேளாண் சட்டங்களையும்  வாபஸ் பெற்றுக்கொண்டார். வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு எந்த ஒரு பயனும் இல்லை. கார்ப்பரேட் கம்பெனிகளிடம் விவசாயிகளை விற்பதே இதன் நோக்கமாக காணப்பட்டது. இந்த போராட்டத்தில் பலர் தங்களது உயிரை இழந்தனர். குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகளின் பங்கு பெறும் வாரியாக இருந்தது.

இத்தனை காலம் போராட்டத்திற்கு பிறகு விவசாயிகளுக்கு நல்ல பயன் கிடைத்துள்ளது என்று பலபேர் கூறிவருகின்றனர். இருப்பினும் சில அரசியல் வட்டாரங்கள் இது திட்டமிட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர். அதாவது பிப்ரவரி மார்ச் மாதங்களில் உத்தரப் பிரதேசம் உத்தரகாண்ட் பஞ்சாப் மணிப்பூர் கோவா ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த ஐந்து மாநிலங்களில் நான்கு மாநிலங்களை பாஜக ஆட்சி செய்து வருகிறது. தற்பொழுது மட்டும் இந்த சட்டங்களை ரத்து செய்யாவிடில் மக்களின் ஓட்டானது பாஜகவிற்கு கிடைக்காமல் போய்விடும்.

அதனால் பிரதமர் திட்டமிட்டு 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ததாக கூறுகின்றனர். அதற்கேற்றவாறு தற்பொழுது மேகலாயா ஆளுநர் மோடியை குறித்து வெளிப்படையான உண்மை சம்பவத்தை கூறியுள்ளார். இச்சம்பவமானது தற்போது மக்களிடையே பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேகலாயா ஆளுநர் சத்தியபால் மாலிக் என்பவர் பிரதமர் மோடியை காணச் சென்றார்.ஆளுநர் சத்யபால் மாலிக் மோடியிடம் போராட்டத்தில் உயிரை இழந்த 500 விவசாயிகளின் நிலை என்னாவது என்று கேட்டார். அதற்கும் மோடி அவர்களின் உயிரை துச்சமென எண்ணி, விவசாயிகள் எனக்காகவா உயிரிழந்தார்கள்? என்று பதிலளித்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த பதிலைக் கேட்ட ஆளுநர் திகைத்துள்ளார்.நீங்கள் தானே இந்தியாவின் பிரதமர் நீங்களே இவ்வாறு கூறலாமா என்று கேட்டேன். மேற்கொண்டு அவரிடம் விவாதம் செய்தேன். அதற்கு மோடி இறுதியில்அமித் ஷாவை சந்தித்துகொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.

பிறகு அமித்ஷாவை சந்தித்து மோடிக்கும் எனக்கும் நடந்த விவாதத்தை கூறினேன். அதற்கு அமித்ஷா கூறியது, அவர் ஏதோ சொல்லிவிட்டார் விடுங்கள், இனி எதுவாக இருந்தாலும் என்னை சந்தியுங்கள் என்று கூறினார். எனக்கு இவர் கூறியதும் திருப்திகரமாக இல்லை. இவர்களுக்கு இடையே நடந்த விவாதத்தை ஹரியானாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் கூறியுள்ளார்.மேலும் பிரதமர் மோடி மிகவும் திமிர் பிடித்தவர் என்று குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமின்றி பிரதமர் கூறிய இந்த பொறுப்பற்ற பேச்சால் மக்கள் பலர் கோபம் அடைந்துள்ளனர் விவசாயிகளின் உயிர் துச்சம் என்று எண்ணி விட்டாரா பிரதமர்? என்றும் பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.