BJP: நாயுடு நிதிஷ் .. அடித்து தூக்கப்போகும் மோடி!! எங்கள் பக்கம் திமுக வரப்போகுது எச்சரிக்கை!!

0
883
Modi gives warning to Telugu Desam and Bihar
Modi gives warning to Telugu Desam and Bihar

BJP DMK: தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு தினம் முடிந்ததிலிருந்து பாஜக காங்கிரஸ் கூட்டணி வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் எதிர்பார்க்கலாம் என்ற நிலைப்பாடானது எதிர்கட்சிகள் மத்தியில் உள்ளது.

மத்தியில் பாஜகவானது இரு கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்து வரும் நிலையில் தற்போது அவர்களை எச்சரிக்கும் விதமாக திமுக வுடன் கூட்டணி வைக்க விரும்புகிறது. தெலுங்கு தேசம் மற்றும் பீகாருடன் கூட்டணி அமைத்த காரணத்தினால் பட்ஜெட் தாக்குதலில் மிகப்பெரிய பங்கு இந்த இரு மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் ஒதுக்கப்பட்டது.

மாநில மேம்பாட்டு பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி தான் என்று மத்திய அரசு காரணம் கூறினாலும், அரசியல் வட்டாரத்தில் கூட்டணி கட்சிக்காக இவர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது என்று ஒரு பேச்சு இருந்து தான் வருகிறது. தற்பொழுது தமிழ்நாட்டில் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பாஜக அதிகளவு ஈடுபாட்டுடன் கலந்து கொண்டது. வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி விலகும் அல்லது அதிக சீட்டுகள் கேட்டு காங்கிரஸ் கோரிக்கை வைக்கும் என்று கூறுகின்றனர்.

ஆனால் திமுக அதனை மறுக்கும் பட்சத்தில், காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணி வைப்போம் என்று கூற அதிக வாய்ப்புள்ளதாகவும் அதேபோல வெளிப்படையாக இதனை தெரிவிக்கும் பட்சத்தில் திமுகவும் பாஜக கூட்டணி நாடுவோம் என பதிலுக்கு கூறுவதாக தெரிவிக்கின்றனர். காங்கிரஸ் கேட்கும் சீட்டானது திமுக ஒதுக்கி விட்டால் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு இடையே மனக்கசப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி மீண்டும் திமுக ஆட்சி அமையும் பட்சத்தில் அது காங்கிரஸ் ஆளுமையுடன் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இதனை தவிர்க்கவே திமுக குறைந்தபட்ச சீட்டுகளை காங்கிரசுக்கு வழங்குகிறது. அதேபோல பாஜகவும் திமுக கூட்டணியை நாடும் பட்சத்தில் தெலுங்கு தேசம் மற்றும் பீகாருக்கு எச்சரிக்கை விட இருப்பதாக கூறுகின்றனர். என் டி ஏ கூட்டணியில் மேற்கொண்டு தமிழகம் மற்றும் திரினாமுல் காங்கிரஸ் இடம்பெரும் பட்சத்தில் பாஜக மாபெரும் சக்தியாக கூட்டணியில் உருவெடுக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இதனால் என்டிஏ கூட்டணியுடன் தனி பெரும்பான்மையாக பாஜக அடுத்த முறையும் ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்ற மனப்போக்கில் உள்ளது.

Previous articleஇனி ரேஷன் கடைகளில் இப்படி பொருள் வாங்க முடியாது! புதிய நடைமுறையை கொண்டு வரும் அரசு!
Next articleமலத்தை அடுத்து குடிநீர் தேக்க தொட்டியில் கலந்த விஷம்.. அதிர்ச்சியில் ஊர் பொது மக்கள்!!