இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக, பல மாநிலங்களில் தடுப்பூசி இயக்கங்கள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி தடுப்பூசிகள் இது தொடர்பாக ஆய்வு நடத்தியதாக சொல்லப்படுகிறது. காணொளி மூலமாக நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் நாட்டின் தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்து இருக்கிறார்.
இப்போது இருக்கும் தடுப்பூசி மருந்துகளின் இருப்பு தொடர்பாகவும், அதனை அறிவிக்க செய்வதற்கான திட்டம் தொடர்பாகவும், பிரதமர் மோடியிடம் எடுத்துரைக்கப்பட்டது. தெரிவிக்கப்படுகிறது. தடுப்பூசி உற்பத்தியைப் பெருக்குவதற்காக தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கம் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார பணியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் 40 வயதிற்கும் அதிகமானோர் மற்றும் 18 முதல் 44 வயது வரை இருப்பவர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி வழங்கல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்திருக்கிறார். பல மாநிலங்களில் தடுப்பு மருந்து தொடர்பாக ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி அதிக அளவில் தடுப்பு மருந்து வீணாவதாகவும் அதனை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
தடுப்பூசி இருப்பு தொடர்பாக மாநிலங்களுக்கு முன்கூட்டியே தெரிய படுத்துவதாகவும், அந்த தகவலை மாவட்டங்களுக்கு அனுப்பி பொதுமக்கள் சிரமமின்றி இருப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், போன்ற முக்கிய அமைச்சர்கள் பிரதமரின் முதன்மைச் செயலாளர் அமைச்சரவை செயலாளர் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் இதர முக்கிய அலுவலர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்று இருக்கிறார்கள்.