மீண்டும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பா? முதலமைச்சர் திடீர் ஆலோசனை!

0
74

தமிழ்நாட்டில் ஜூன் மாதம் ஏழாம் தேதியுடன் தற்போது இருக்கும் போது ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில், அந்த ஊரடங்கை இன்னும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கலாம் என நேற்று நடைபெற்ற முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

தமிழ்நாட்டில் இதுவரையில் 35 ஆயிரத்தை தாண்டிய ஒரு நாள் நோய் தொற்று பாதிப்பு நேற்றைய நிலவரப்படி 22 ஆயிரமாக குறைந்து இருக்கிறது. இதற்கு காரணம் முழு ஊரடங்கு அமலில் இருப்பது தான் என்று சொல்லப்படுகிறது.

கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் ஊரடங்கு போடப்பட்டது. முதலில் மே மாதம் 24ஆம் தேதி வரையில் அந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நோய்த்தொற்று பரவல் அதிகரித்த பின்னர் மே மாதம் 31-ஆம் தேதி வரை அந்த ஊர் எனக்கு நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகு மருத்துவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் ஆலோசனை செய்த முதலமைச்சர் ஸ்டாலின் அந்த ஊரடங்கை ஜூன் மாதம் ஏழாம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார்.

இவைகளுக்கு நடுவே தமிழகத்தில் பாதிப்பு குறைந்து வருகிறது, ஆனாலும் கூட அது திருப்தி தரும் விதமாக இருக்கவில்லை என்று ஸ்டாலின் தெரிவித்தார். அதேநேரத்தில் ஊரடங்குக்கு விரைவாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

இதன் காரணமாக, தான் ஜூன் மாதம் 7ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் நேற்றைய தினம் மறுபடியும் முதலமைச்சர் ஸ்டாலின் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி திரிபாதி. நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் போன்றோர் இதில் பங்கேற்றார்கள்.

அந்த சமயத்தில் சென்னை போன்ற நெருக்கடி மிகுந்த பகுதிகளில் பாதிப்புகள் குறைந்து இருந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் நோய் தொற்று வராமல் இன்னும் குறையவில்லை என்று மருத்துவ வல்லுநர்கள் குழு தெரிவித்திருக்கிறது. ஆகவே இன்னும் ஒரு வார காலம் இந்த ஊரடங்கு நீடிக்கலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி தமிழ்நாட்டில் சிற்சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று முடிவெடுக்கபட்டிருப்பதாகவும், சிறுசிறு தளர்வுகள் கொடுப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.