மோடியின் கோரிக்கையை மறுத்த முக்கிய நபர்! தூசி தட்டப்படும் வழக்குகள்!

Photo of author

By Sakthi

2019ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு பாஜக தன்னுடைய   கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு ஆர்வமாக உள்ளதாகவும், ஆனால் அதுபோன்ற கூட்டணிக்கு ஆதரவு கிடையாது என்றும், அது எந்த விதத்திலும் சாத்தியப்படாது என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கூறியதாகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறியிருக்கிறார். இதன் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சரத்பவார் சந்திப்பு தொடர்பாக அப்போது பேசப்பட்ட யூகங்கள்  உண்மை என்று தெரியவந்திருக்கிறது.

சரத்பவாரின் 81 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மராத்தி நாளிதழான லோக் சத்தா புத்தக வெளியீட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் நேற்று அங்கே பேட்டியளித்த  சரத்பவார் ஒரு சில முக்கிய விஷயங்களை  ஆசிரியரிடம் பகிர்ந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

அதாவது கடந்த 2019ஆம் ஆண்டு மகாராஷ்டிர சட்டசபை தேர்தலுக்கு பிறகு பாஜகவுக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கூட்டணி தொடர்பான விவாதம் நடைபெற்றது. உண்மைதான் இது தொடர்பாக நாம் சிந்திக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி என்னிடம் தெரிவித்தார். ஆனாலும் அது சாத்தியமில்லை என்று அவரிடம் அவருடைய அலுவலகத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறி இருக்கிறார்.

மாநில தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற நிகழ்ச்சிகளை நினைவுகூர்ந்த அவர் பாஜகவிற்கு ஆதரவு தருவது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக தான் சில குறும்புத்தகமான அறிக்கையை வெளியிட்டதாகவும், சரத்பவார் தெரிவித்திருக்கிறார்.

2019 ஆம் ஆண்டில் உங்கள் மருமகன் அஜித் பவார் திடீரென்று  தேவேந்திர பட்னவிஸ் அவர்களுடன்  கூட்டணி வைத்தது உங்கள் அறிவுரையின்படிதானா என்று கேள்வி எழுப்பிய போது அஜித் பவாரை  பாஜகவிற்கு அனுப்பியிருந்தால்  அதனை முழுமையாக செய்வேன் அரைகுறை எல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது என்று பதில் தெரிவித்திருக்கின்றார் சரத்பவார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் மிக விரைவில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தல் தொடர்பான கேள்விக்கு பதில் தெரிவித்த அவர் உத்தரப்பிரதேசத்தில் தற்சமயம் 50 சதவீத வாய்ப்பு இருக்கிறது. தெளிவான வெற்றியாளர் இல்லை, உத்தர பிரதேசத்திற்கு இன்று ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் திட்டங்களை அறிவித்துக் கொண்டே இருக்கிறார் மோடி  இதுவே பாஜகவின் நிலையை எடுத்துக் காட்டுகிறது என்று கூறியிருக்கிறார் சரத் பவார்.

பிரதமர் நரேந்திர மோடி தன்னுடன் கூட்டணி வைக்க விரும்பியதாகவும், அதற்கு சாத்தியமில்லை என்று பிரதமர் அலுவலகத்திலேயே வைத்து பிரதமர் நரேந்திர மோடியிடம் கூறியதாகவும், அவர் தெரிவித்திருக்கிறார் இந்தியாவின் மூத்த தலைவரான சரத்குமார் அவ்வாறு மறுத்ததன் பின்னால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மீதான வழக்குகள் அமலாக்கத் துறையால் தூசிதட்டப்படுகின்றன என்ற விமர்சனமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.