துரும்பு அளவு கூட தவறு செய்யாதவர் மோடி! பாமக நிறுவனர் ராமதாஸ் புகழாரம்

0
317
#image_title

துரும்பு அளவு கூட தவறு செய்யாதவர் மோடி! பாமக நிறுவனர் ராமதாஸ் புகழாரம்!!

ஒரு துரும்பு அளவு கூட தவறு செய்யாத மனிதர் பிரதமர் மோடி என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில்,

பாஜக கூட்டணியில் கைக்கோர்த்துள்ள பாமக, தருமபுரி, கடலூர் உள்பட பத்து இடங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், விழுப்புரத்தில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாடிய ராமதாஸ், உலகத் தலைவர்களே கண்டு வியக்கும் அற்புதமான தலைவர் பிரதமர் மோடி என புகழாரம் சூட்டினார்.

மூன்றாவது முறையாக மோடியை பிரதமராக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், ஒரு துரும்பு அளவுக்குக் கூட பிரதமர் மோடி தவறு செய்யவில்லை. என கூறினார். பரிசுத்தமான அவர், அன்பிற்கு ஒரு இலக்கணம் எனவும் புகழ்ந்து தள்ளினார்.

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளுடன் பேச் சுவார்த்தை நடத்தி வந்த பா.ம.க, இறுதியில் பா.ஜ.க வுடன் கைக்கோர்த்தது.

மேலும் அதே நாளில் சேலத்தில் நடந்த பிரதமர் மோடி பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற ராமதாசை, ஆச் சாரியத்துடன் வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி, சிறிது நேரம் விடாமல் அவருடன் கைகுலுக்கிக் கொண்டு இருந்தார் என்பது நினைவு கூறத்தக்கது.

மகாராஷ்ட்டிராவில், பூனையை காப்பாற்றுவதற்காக, பாழடைந்த கிணற்றுக்குள் இறங்கிய ஐந்து பேர் விஷ வாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மகாராஷ்டிராவின் அகமத்நகர் பகுதியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் பூனை ஒன்று தவறி விழுந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், பூனையை காப்பாற்றுவதற்காக கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். அப்பபோது கிணற்றில் இருந்த சேற்றில் சிக்கிக் கொண்ட அவர் வெளியில் வர முடியாதல் தவித்தார். இதனை கண்டா மற்றொருவர் அவரைக் காப்பாற்ற கிணற்றில் இறங்கியுள்ளார். இவ்வாறாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ஒருவரையொருவர் காப்பாற்ற கிணற்றுக்குள் இறங்கி உள்ளனர். அப்போது, விஷ வாயு தாக்கியதில், மயங்கி அனைவரும் சம்பவ இடத்திலேயேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர், மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடத்தப்படட விசாரணையில், அந்த கிணறு விலங்குகளின் கழிவுகளை சேமித்து பயோகேஸ் தயாரிக்க பயன்படுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில், பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்றுள்ள அந்த கிணற்றை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Previous articleமோடி ஆட்சி மீண்டும் அமைந்தால் இந்தியாவே அடையாளம் தெரியாமல் மாறிவிடும்…. கடுமையாக எச்சரிக்கும் நிர்மலா சீதாராமன் கணவர்..!
Next articleமதுரையில் ரோடு ஷோ நடத்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…. எப்போது தெரியுமா?