மோடியின் அறிவிப்பை கிண்டல் செய்த குஷ்பு! வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என்று அட்வைஸ்.!!
இன்று நேரலையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கொரோனா பற்றி மக்களிடையே புதிய வேண்டுகோளுடன் கூடிய அறிவிப்பை கூறினார். இந்த தகவல் பல்வேறு தரப்பு ஆதரவும் சில தரப்பு விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது.
கொரோனா பாதிப்பின் இருளை அகற்ற அனைவரும் வருகின்ற ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வரை மின் விளக்குகளை அனைத்துவிடுங்கள் என்று மோடி கூறினார். மேலும் வீட்டில் இருக்கும் நான்கு மூலைகளில் அகல்விளக்கு, டார்ச்லைட் மெழுகுவர்த்தி ஆகியவை ஒளிவீசும் படி செய்யுங்கள் என்று மக்களிடம் தெரிவித்தார். மோடியின் முக்கிய அறிவிப்பை பலரும் எதிர்பார்த்து காத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மோடியின் அறிவிப்பை கிண்டல் செய்வதுபோல் இருந்தாலும் அதன் மூலம் நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். இதை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், யுரேகா! கொரோனாவை எதிர்க்க என்ன ஒரு வழி, இப்படி செய்தால் கொரோனா பிரச்சினை தீர்ந்துவிடுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். விளக்கு வைக்கிறேன் என்று வீட்டைவிட்டு யாரும் வெளியே வரவேண்டாம். தற்போதைய சூழலுக்கு சமூக இடைவெளி மிக முக்கியமான ஒன்று. ஆகவே இடைவெளி காட்டுவதில் கவனம் செலுத்துங்கள் என்றும் கூறியுள்ளார்.
குஷ்புவின் டுவிட்டருக்கு பதில் அளித்த பலரும் ஆம் சரியாக சொன்னீர்கள், பிரதமர் அலுவலகத்தில் படித்தவர் ஒருவர் கூட இல்லையா, விளக்கை ஏற்றினால் கொரோனா வைரஸ் அழியாது உலகம் நம்மைப்பார்த்து சிரிக்கும் என்பது போல் பதிவு செய்து வருகின்றனர். இதற்கு முன்பு மருத்துவர்களை ஊக்குவிக்கும் வகையில் அனைவரும் வீட்டிற்கு வெளியே வந்து கை தட்டி உற்சாகமூட்டுங்கள் என்று பிரதமர் கூறியது மக்களிடம் நல்ல பலன் கிடைத்தது.