ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல் காம் பகுதியில் இருந்த 26 சுற்றுலாப் பயணிகளை பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதை அடுத்து இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியலை ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அவர்கள் பாதுகாப்பிற்காக பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்.
மோடி அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :-
இந்தியாவிற்குள் இனி பாகிஸ்தானியர்கள் வருவதற்கான அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் SVES விசாவை வைத்து தற்பொழுது இந்தியாவிற்குள் இருக்கக்கூடிய பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என தெரிவிக்கிறது. குறிப்பாக தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை தரும் வரை இந்திய அரசு ஓயாது என்றும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே மாதத்தின் துவக்கத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, இந்தியாவினுடைய பாதுகாப்பு விமானப்படை கடற்படை ஆலோசகர்கள் இஸ்லாம் அதில் இருந்து அழைக்கப்படுவார்கள் என்றும் தூதரக உதவிகளை குறைக்கவும் சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் காஷ்மீரில் பயங்கரவாதிகள் பற்றிய தகவல் கொடுப்பவருக்கு 20 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என காஷ்மீர் காவல் துறையினர் அறிவித்திருப்பதையும் சுட்டிக்காட்டி உள்ளது. இன்று ஏப்ரல் 24ஆம் தேதி அன்று பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஷெரிஃப் தலைமையில் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.