இதைக் கொண்டாட கூடாது இது தான் தொடக்கம்! ஊரடங்கு உத்தரவு குறித்து மோடி டிவிட்
இன்று நாடு முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிராக ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. பிரதமர் மோடியின் வேண்டுகோளை அடுத்து இந்த ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது.மக்கள் தாமாக முன்வந்து ஊரடங்கு கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருந்தார். இதனையடுத்து இன்று நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது.
இன்று ஞாயிற்றுக்கிழமை எல்லோரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை எல்லோரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் மோடியின் கோரிக்கையை அடுத்து மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருந்தனர். அதுமட்டுமில்லாமல் இன்று மாலை 5 மணி அளவில் தங்கள் வீட்டின் பால்கனி அருகே வந்து கைதட்டினார்கள். இது கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் உழைக்கும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த செயலில் ஈடுபட்டார்கள்.
இந்த ஊரடங்கு உத்தரவு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி கருத்து தெரிவித்திருந்தார். இந்த ஊரடங்கு இன்று இரவு 9 மணி அளவில் நிறைவு பெறுகிறது. ஆனால் இதை நாம் கொண்டாடக் கூடாது கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்றும் இதனை வெற்றி என்று யாரும் கருதக்கூடாது நம்முடைய மிகப் பெரிய போராட்டத்திற்கு இது ஒரு தொடக்கம்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.