கைப்பேசி மாநாட்டில் பங்கேற்கும் மோடி! இன்று முதல் 5ஜி சேவை தொடக்கம்!
இன்று மோடி டெல்லி பிரகதி மைதானத்தில் நடைப்பெறும் ஆறாவது இந்திய கைப்பேசி மாநாட்டை தொடங்கி வைகின்றார்.கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஐஐடிகள் ,பெங்களூர் விஞ்ஞான தொழில்நுட்ப நிறுவனம் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் நிறுவனமான சமீர் போன்றவைகள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.அதன பிறகு 5ஜி சேவை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தற்போது நடைமுறையில் உள்ள 4ஜி சேவையைவிட பல மடங்கு வேகம் கொண்டது 5ஜி.இந்த சேவையானது பின்னடைவு இல்லாத இணைப்பையும் நிகழ் நேரத்தில் தரவை பகிரும் உயர் தரவு விகிதம் கொண்டது. பில்லியன் கணக்கில் இணைக்கப்பட்ட சாதனங்களை இயக்கம் ஆற்றல் திறன் கொண்டது.
மேலும் இதற்கான அலைக்கற்றை ஏலத்தின் மூலம் அரசுக்கு ரூ 1.50 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதனையடுத்து ஏர்டெல் ,ஐடியா வோடா ,ஜியோ போன்ற நிறுவங்களோடு அதானியின் நிறுவனம் சுமார் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசையில் 5ஜி அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்துள்ளது.5ஜி சேவை நாட்டின் முக்கிய நகரங்களில் முதலில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அதற்கு பிறகு அடுத்த ஒரு சில ஆண்டுகளில் படிப்படியாக 5ஜி சேவையானது விரிவு படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த சேவையின் மூலம் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார தாக்கம் 2035 ஆம் ஆண்டில் சுமார் ரூ 35 லட்சம் கோடி ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.5ஜி சேவை தொடக்கத்தை முன்னிட்டு மாநிலங்களின் பங்கு ,தொழில் வாய்ப்புகள் திறன் மேம்பாட்டுக்கான தேவைகளுக்காக இந்த கைப்பேசி மாநாடு நடத்தப்படுகின்றது இந்த மாநாட்டில் இன்று மோடி அவர்கள் 5ஜி சேவையை தொடங்கி வைகின்றார்.