உஜ்வாளா யோஜனாவில் சிலிண்டர் கனெக்சன் பெறுபவர்களுக்கு மோடியின் அதிரடியான சலுகை!

Photo of author

By Rupa

உஜ்வாளா யோஜனாவில் சிலிண்டர் கனெக்சன் பெறுபவர்களுக்கு மோடியின் அதிரடியான சலுகை!

ஒரு கோடி மக்களை சென்றடைந்த உஜ்வானா யோஜனா திட்டம் மேலும் பயனளிக்கும் விதமான சலுகைகளை இந்த வருடம் அரசு அறிவித்துள்ளது.

எவ்வாறு எரிவாயு முறையை இணைப்பது:

BPL குடும்பத்தில் இருக்கும் பெண்கள் அனைவரும் இந்த திட்டத்தை பயன்பத்திக் கொள்ளலாம்.அருகில் இருக்கும் LPG சிலிண்டர் மையத்திற்கு சென்று அங்குள்ள KYC படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து எரிவாயு நிலையத்தில் சமர்பிக்கவும்.இல்லையென்றால் உஜ்வளா யோஜனா திட்டத்தின் வலைதளத்தில் இருந்து படிவத்தை இறக்கம் செய்து அதிலுள்ளவற்றை பூர்த்தி செய்தும் எரிவாயு நிலத்தில் சம்ர்பிகிளாம்.

இணைப்பை பெறும் வேளையில்,உங்களுக்கு தேவையான எரிவாயுதிட்டத்தை எழுத்துபூர்வமாக விண்ணப்பதாரர்கள் KYC படிவத்தில் பூர்த்தி செய்து இருக்க வேண்டும்.ஏன்னென்றால் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் இரண்டு வகைகளில் உள்ளன.முதல் 14.5 இரண்டாவது, 5 கிலோ.இதில் எந்த வகை என எரிவாயு நிறுவனத்திடம் கூறவேண்டும்.இதற்கு தேவைப்படும் ஆவணங்கள் ஆதார் அட்டை,ஓட்டர் ஐடி,ரேஷன் கார்டு இவைகளில் ஏதாவது ஒன்றின் நகலை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படும் ஒன்று தேவைப்படும்.பிறகு வங்கி அறிக்கை ஆவனங்களையும் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டு.இவற்றையெல்லாம் கொடுத்து நீங்கள் உஜ்வாலா யோஜனா திட்டத்தை பெறலாம்.

உஜ்வாலா யோஜனா திட்டத்தினை பெறும் BPL குடும்பத்திற்கு முதல் எரிவாயு இணைப்பிற்கு 1600 ரூபாய் வழங்கப்படுகிறது.இதுமட்டும் அல்லாமல் எரிவாயு அடுப்பை வாங்குவதற்காகவும்,சிலிண்டரை தவணையாக நிரப்புவதற்கும் முன்கூட்டியே பணம் தரப்படுகிறது.இதனால்தான் வரவு செலவு திட்டத்தை அரசாங்கம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் அதிக அளவில் பயனடைகின்றனர்.அரசாங்க புள்ளிவிவரங்களின் படி உஜ்வாலா யோஜனா  திட்டத்தில் 5 கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.2021-22ஆம் ஆண்டில்,8 கோடி குடும்பங்களை இத்திட்டம் சென்றடைய,அரசாங்கம் வழி முறைகளை வகுத்துள்ளது.இத்திட்டம் 1 மே 2016 அன்று தொங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.