மோடியின் திடீர் ஆலோசனைக்கூட்டம்! ஊரடங்கு அமலுக்கு வருமா?
கொரோனா தொற்றானது அதிக அளவு பாதித்து வருகிறது.சென்ற வருடத்தை விட தற்போது கொரோனாவின் 2வது அலையாக உருமாறி அதிக அளவு பாதித்து வருகிறது.ஓர் நாளில் மட்டும் கொரோனாவால் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதித்து வருகின்றனர்.அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் கொரோனா தொற்று அதிக அளவு பரவி வருவதால்,அம்ம்மநிலத்தில் 14 நாட்கள் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
அதனையடுத்து டெல்லியில் அதிக அளவு கொரோனா தொற்று பரவுவதால் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜிரவால் வார இறுதி நாட்களில் ஊரடங்ககு போட்டுள்ளார்.அதுமட்டுமின்றி நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 –ம் வகுப்புக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.அதற்கடுத்து தமிழகத்தில் அதிக அளவு கொரோனா தொற்று பரப்புவதால் காணொளி காட்சி மூலம் மார்ச் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அதிகம் தொற்று உள்ள மாநிலங்களின் முதலமைச்சர்களை சந்தித்தார்.
அப்போது தமிழ்நாட்டில் சில கட்டுப்பாடுகள் நிறுவினர்.மக்கள் கூட்டம் கூடும் இடங்களில் 50% மட்டுமே அனுமதிக்க வேண்டுமென்றும், திருவிழாக்கள்,மாதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி மறுத்தனர்.இவ்வாறு பல கட்டுப்பாடுகளை மத்திய அரசும்,மாநில அரசும் அமல்படுத்தினாலும் மக்களிடம் கொரோனா தொற்று பரவுவது சிறிதளவும் குறையவில்லை.இதனால் இன்று இரவு நரேந்திர மோடி மீண்டும் முக்கிய ஊழியர்களுடனும்,ஆளுனர்களுடனும் ஆலோசனைக்கூட்டம் நடத்த உள்ளார்.இந்த கூட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் எடுக்கப்படும் என கூறி வருகின்றனர்.அதுமட்டுமின்றி ஊரடங்கு அறிவிக்கப்படும் எனவும் கூறுகின்றனர்.