BJP: ஒவ்வொரு மாநிலத்திலும் அமர்த்தப்படும் ஆளுநர்கள் மத்திய தலைமைக்கு மறைமுக ஆதரவு கொடுப்பவர்களாக இருந்தால் தான் அவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். அந்த வகையில் மகாராஷ்டிரா சத்தீஸ்கர் குஜராத் உள்ளிட்ட பல இடங்களில் பாஜக கட்சிக்கு நெருக்கமானவர்களையே ஆளுநர்களாக நியமித்துள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் ஆர் என் ரவியின் ஆளுநர் பதவி காலமானது வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இவருடைய பதவி நீட்டிக்கப்படுமா அல்லது வேறொருவர் புதிதாக நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி அனைவரும் மத்தியிலும் உள்ளது.
அதேபோல தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருக்கும் வரை ஆளுநருடன் வாக்குவாதமாகவே தான் இருக்கும். இதனை மாற்றியமைக்கும் வகையில் ஆளுநர் அமைந்தால் நன்றாக இருக்ககுமென ஆளும் கட்சி எதிர்பார்க்கிறது. இவர்களின் நம்பிக்கையை உடைக்கும் விதமாக மோடி அவரின் ரைட்டனாக இருந்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் குனியில் கைலாசநாதனை பதவி வகிக்க உள்ளதாக பேச்சு அடிப்பட்டு வருகிறது.
மோடி முதல்வராக இருந்த காலத்தில் அம்மாநிலத்தின் முதன்மை செயலாளராக இருந்தது மட்டுமின்றி மோடி இல்லாத நேரத்தில் ஆட்சி பொறுப்பும் இவர் கையில்தான் இருந்தது. இவரது பூர்வீகம் கேரளாவாக இருந்தாலும் படிப்பு அதனை சுற்றிய அனைத்தும் தமிழ்நாட்டில்தான் இருந்துள்ளது. இதனால் அவருக்கு தமிழக அரசியலை கையாளுவதும் எளிது. பல நெருக்கடிகளில் மோடிக்கு ஆதரவளித்த குனியில் கைலாசநாதனை தமிழகத்திற்கு ஆளுநராக நியமித்தால் பேராதரவு கிடைக்கும் என்று மோடி எண்ணுகிறார்.
அந்த வகையில் சட்டமன்ற தேர்தல் வருவதற்கு முன்பாக இவரை பணி நியமனம் செய்ய வேண்டும் என்பதில் குறியாக உள்ளாராம். இது ஆளும் கட்சிக்கு பேரடியாக தான் இருக்கும். முன்னதாகவே ஆளுநர் மற்றும் முதல்வர் உள்ளிட்டவர்களுக்கு ஒத்துப்போகாத நிலையில் இது மேற்கொண்டு அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர்.