“கோலிதான் பெஸ்ட்… அவரோட கம்பேர் பண்ண ஆளே இல்லை…” பாகிஸ்தான் பவுலர் புகழ்ச்சி

Photo of author

By Vinoth

“கோலிதான் பெஸ்ட்… அவரோட கம்பேர் பண்ண ஆளே இல்லை…” பாகிஸ்தான் பவுலர் புகழ்ச்சி

இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலிதான் இன்றைய காலகட்டத்தின் சிறந்த பேட்ஸ்மேன் என பாகிஸ்தான் முன்னாள் பந்து வீச்சாளர் முகமது அமீர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி நீண்ட கால தடுமாற்றத்துக்குப் பிறகு இப்போது மீண்டும் தன்னுடைய பார்மை மீட்டெடுத்துள்ளார். உலகக்கோப்பை தொடரில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அரைசதம் அடித்துக் கலக்கியுள்ளார்.

குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான அவரின் இன்னிங்ஸ் சமீபகாலத்தில் விளையாடப்பட்ட மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அந்த போட்டியில் கோஹ்லி தனது மாஸ்டர் இன்னிங்ஸை வெளிப்படுத்தினார் மற்றும் ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமீர் கோலி பற்றி பேசும் போது “சந்தேகமே இல்லாமல் இந்த சகாப்தத்தின் சிறந்த பேட்ஸ்மேன் கோலிதான். அவரை நாம் யாருடனும் ஒப்பிடவே முடியாது. அவர் அளவுக்கு அழுத்தத்தில் யாராலும் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியாது” எனக் கூறியுள்ளார்.

அதே நேரத்தில் அமீர் பாகிஸ்தான் அணியையும், கேப்டன் பாபர் அசாம் மற்றும் தேர்வுக்குழு தலைவர் ரமீஸ் ராஜா ஆகியோரைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மோசமான் அணித்தேர்வே பாகிஸ்தான் அணியின் தோல்விக்குக் காரணம் எனக் கூறியுள்ளார்.