கோவை கார் குண்டுவெடிப்பில் வெளிநாட்டு சதி இருக்கிறதா? களம் இறங்கியது தேசிய புலனாய்வு முகமை!

0
82

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் எதிரில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தமிழக காவல்துறை நடத்திய விசாரணையில் அந்த காரில் இருந்த நபர் பழைய துணி கடை வியாபாரி என ஜமோஷா முபின் என்று தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து அவர் வீட்டை சோதனையை செய்த போது வெடிகுண்டு தயாரிக்க தேவைப்படும் 75 கிலோ வெடி பொருட்கள் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. இது காவல்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது ஆகவே அவரின் உறவினர்கள் உட்பட 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், தமிழக அரசு இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற பரிந்துரை செய்தது. தேசிய புலனாய்வு முகமையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தது.

தமிழக காவல்துறை நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தாக்குதல் தீவிரவாத சிந்தனை கொண்டவர்கள் கையாளும் ஒற்றை ஓநாய் தாக்குதல் முறையை ஒத்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

அதாவது ஒற்றை ஓநாய் தாக்குதல் என்பது, தீவிரவாத அமைப்பின் உதவி இல்லாமல் தனியாக தன்னுடைய சித்தாந்தத்திற்காக தாக்குதல் நடத்தும் முறையாகும். இந்த ஒற்றை ஓநாய் தாக்குதல்கள் (ஐ.எஸ்) இஸ்லாமிய அரசு, அல்கொய்தா உள்ளிட்ட அமைப்புகளின் சித்தாந்தத்தில் உருவானவை என்பது குறிப்பிடத்தக்கது.

மூணு ட்ரம்களில் வெடி மருந்துகளுடன் ஆணி கோழி கொண்டு உள்ளிட்டவற்றை நிரப்பி காரில் வைத்துக் கொண்டு ஜமிஷா முபின் காரை கோயில் முன்பாக நிறுத்தி சிலிண்டரில் இருந்து கேசை திறந்து விட்டு தற்கொலை படை தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகத்திருக்கிறார்கள்.

அதாவது கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தி கோவில் முன்பு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்த அவர் நினைத்திருந்த நிலையில், நல்ல வாய்ப்பாக பெரிய பாதிப்பு இல்லாமல் போயிருப்பதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர் தன்னுடைய நெருங்கிய உறவினர்களான அசாருதீன் மற்றும் அப்சர் கான் உள்ளிட்டவருடன் கோனியம்மன் கோவில் உட்பட பல கோவில்களை சமீபத்தில் நோட்டமிட்டிருப்பதும் விசாரணைகள் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் அவருடைய உறவினர்களான அசாருதீன் மற்றும் அப்சர் கான் உள்ளிட்டோர் காந்தி பார்க் பகுதியில் கேஸ் சிலிண்டர் வாங்கியிருப்பதும் பழைய மார்க்கெட் பகுதியில் 3 இரும்பு ட்ரம்களை வாங்கி இருப்பதும் விசாரணையின் மூலமாக தெரிய வந்துள்ளது. இது குறித்து சிசிடிவி காட்சிகளை சேகரிக்கும் பணியிலும் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தேசிய புலனாய்வு முகமை தன்னுடைய விசாரணையை ஆரம்பிப்பதற்கு முன்பே கோவை காவல்துறையினர் முக்கிய தகவல்களை விசாரணை செய்து சேகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் மூலமாக கோவையில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்த திட்டமிட்டதும் இந்த விசாரணையின் மூலமாக தெரிய வந்தது. அதோடு இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் வெளிநாட்டு சதிகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் தான், தேசிய புலனாய்வு முகமை விசாரணையில் முழுமையான உண்மை தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.