“இவர் ஒப்பனரா… உண்மையிலேயே புரியல…”அணியில் நடந்த மாற்றம் குறித்து முன்னாள் வீரரின் கருத்து

Photo of author

By Vinoth

“இவர் ஒப்பனரா… உண்மையிலேயே புரியல…”அணியில் நடந்த மாற்றம் குறித்து முன்னாள் வீரரின் கருத்து

Vinoth

Updated on:

“இவர் ஒப்பனரா… உண்மையிலேயே புரியல…”அணியில் நடந்த மாற்றம் குறித்து முன்னாள் வீரரின் கருத்து

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸோடு மோதிய முதல் டி 20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து நேற்று நடந்த இந்த முதல் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புகளுக்கு 190 ரன்கள் சேர்த்தது.

பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 191 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 122 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இந்த போட்டியில் வழக்கமாக நான்காம் இடத்தில் ஆடும் சூர்யகுமார் யாதவ்வை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கினர். ஆனால் அந்த முடிவு பெரியளவில் பலனளிக்கவில்லை. இதுகுறித்து இப்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன. முகமது கைஃப் இதுபற்றி பேசும்போது “உண்மையிலேயே எனக்கு அந்த முடிவை ஏன் எடுத்தார்கள் என தெரியவில்லை.

சில போட்டிகளில் ரிஷப் பண்ட் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். இப்போது சூர்யாவை ஏன் இறக்கினார்கள் என தெரியவில்லை. சில புதுமுயற்சிகளை செய்யும் போது அந்த வீரர்களுக்கு 5 போட்டிகளாவது வாய்ப்பளிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.