இந்தியா-ஆஸ்திரேலியா தொடரில் முகமது ஷமி!! 12 மாதங்களுக்கு பின் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பினார்!!

Photo of author

By Vijay

இந்தியா-ஆஸ்திரேலியா தொடரில் முகமது ஷமி!! 12 மாதங்களுக்கு பின் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பினார்!!

Vijay

mohammed-shami-in-the-india-australia-series

CRICKET: நீண்ட நாட்களுக்கு பின் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ளார் இந்நிலையில் இவர் ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

12 மாதங்களுக்கு பின் அதாவது 360 நாட்களுக்கு பின் மீண்டும் தொடரில் விளையாடவுள்ள முகமது ஷமி. மத்திய பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை தொடரில் பெண்கள் அணியில் விளையாட உள்ளார். இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா தொடரில் இடம் பிடிப்பாரா??

இந்திய அணியின் மிக முக்கியமான வீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி  இவர் கடைசியாக ஒரு நாள் உலக கோப்பை தொடரில் விளையாடினார். அப்போது அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக 7 மாதங்கள் ஓய்வில் இருந்தார். அதன் பின் நியூசிலாந்து தொடரில் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் நியூசிலாந்து தொடரில் பங்கேற்கவில்லை. அதன் பின் தீவிர பயிற்சியில் ஈடுபடும் போது மீண்டும் காலில் வீக்கம் காரணமாக சிகிச்சை மேற்கொண்டார். இந்நிலையில் நிச்சயம் அவர் ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான அணி பட்டியலில் ஷமி இல்லை இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

இந்நிலையில் அவர் முழு உடல் தகுதி பெற்று ரஞ்சி கோப்பை தொடரில் மத்திய பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் பெங்கால் அணியில் விளையாட உள்ளார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வட்டாரங்கள் இன்னும் இரண்டு போட்டிகளில் மட்டும் உள்ளூர் போட்டியில் விளையாட முடியும் அதன் பின் டிசம்பரில் ஆஸ்திரேலியா தொடரில் இடம் பிடிப்பார் என தகவல் வெளியாகி வருகின்றன. முதல் இரண்டு போட்டியில் விளையாட முடியவில்லை என்றாலும் கடைசி மூன்று போட்டிகளிலும் விளையாட முடியும் என்றும் கூறி வருகின்றனர்.