ஐ பி எல் போட்டி தொடரின் மெகா ஏலம் நடைபெறவுள்ள நிலையில் எந்த வீரரை எந்த அணி ஏலத்தில் எடுக்கும் என்று அணியின் உரிமையாளர்களை விட ரசிகர்கள் பலவிதமான கருத்துக்களை கூறி வருகின்றனர். CSK அணி X தளத்தில் போட்ட பதிவு ஒன்று ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
RCB அணியில் முக்கிய பந்து வீச்சாளராக பார்க்கப்பட்ட வீரர் முகமது சிராஜ். இவர் முதலில் 2017 ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணியில் விளையாடினார் அந்த ஆண்டு 6 போட்டிகளில் விளையாடிய 10 விக்கெட்டுகள் எடுத்தார். 2018 ஆண்டு RCB அவரை ஏலத்தில் எடுத்த பிறகு 7 ஆண்டுகளாக rcb அணியில் ஒரு முக்கிய வீரராக மாறினார். 87 போட்டிகளில் விளையாடிய இவர் 83 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
இந்நிலையில் இவர் rcb அணியில் தக்க வைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தக்க வைக்கப்படவில்லை. தற்போது பெங்களூர் அணியில் விராட் கோலி ரூ.21 கோடி, ரசத் படிதார் ரூ. 11 கோடி , யஷ் தயாள் ரூ. 5 கோடி ஆகிய வீரர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். RCB அணி ரூ.83 கோடியுடன் ஏலத்தில் பங்கேற்க உள்ளது.
இந்நிலையில் CSK அணி ஒரு ட்வீட் ஒன்றை X தளத்தில் வெளியிட்டது. அதில் siuuu கொண்டாட்டத்தை காண உள்ளோம் என குறிப்பிட்டிருந்தது. அது ரொனால்டோ என்று அனைவருக்கும் தெரியும் ஆனால் அதை சிராஜ் கிரிக்கெட்டில் செய்கிறார் எனவே அவரை ஏலத்தில் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.