கோப்பையை வென்ற CSK அணி!! குதூகலத்தில் இயக்குனர் மோகன்.ஜி போட்ட பதிவு!!

பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தை இயக்கியதன் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன்ஜி. அதன்பின்னர் கிரவுட் ஃபண்டிங் முறையில் திரௌபதி என்ற நாடக காதல் திருமணங்களை மையப்படுத்திய திரைப்படத்தை இயக்கி பிரபலமடைந்தார்.

சமீபத்தில் நடிகை தர்ஷா குப்தா மற்றும் ரிச்சர்ட் ரிஷி , ராதாரவி, தம்பி ராமையா போன்ற முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்த ருத்ரதாண்டவம் திரைப்படத்தை இயக்கி இருந்தார். போதைப்பொருள் கடத்தல் மூலமாக இளைஞர்களின் வாழ்வு எவ்வாறு சூறையாடப்படுகிறது என்பது குறித்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இயக்குனர் மோகன் ஜி நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து ஒரு வாழ்த்து பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “தல உங்களைப்போல இன்னொருவன் பிறந்து தான் வரணும்” என்று கூறியுள்ளார். தற்போது இந்த ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment