கடின உழைப்பில் கிடைக்கும் பணம்.. வீண் விரையம் ஆகாமல் இருக்க எளிய பரிகாரம்!

Photo of author

By Divya

கடின உழைப்பில் கிடைக்கும் பணம்.. வீண் விரையம் ஆகாமல் இருக்க எளிய பரிகாரம்!

இன்றைய உலகில் பிடித்த வேலை கிடைப்பது என்பது எளிதற்ற ஒன்று. அதிலும் நாம் எதிர்பார்க்கும் சம்பளம் கிடைப்பது அவ்வளவு எளிதில் நடந்து விடாது. இவ்வாறு நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம்.. வீண் விரையம் ஆகாமல் இருக்க வெள்ளிக்கிழமை அன்று நீங்கள் ஒரு பரிகாரம் செய்து வர வேண்டும்.

தொடர்ந்து 9 வெள்ளிக்கிழமை செய்து வந்தால் பணம் வீண் விரையம் ஆகாமல் அதன் வரவு அதிகரிக்கும்…

இதற்கு தேவைப்படும் பொருட்கள்…

1)நெய்
2)வெற்றிலை
3)மஞ்சள் துணி
4)மஞ்சள் தூள்
5)பச்சை கற்பூரம்

ஒரு வெற்றிலையில் சிறிது நெய் தடவி பச்சை கற்பூரம் ஒரு துண்டு வைத்துக் கொள்ளவும். இந்த வெற்றிலையை மஞ்சள் பட்டு துணியில் வைத்து மஞ்சள் நூலால் சிறு மூட்டையாக கட்டிக் கொள்ளவும்.

இந்த மூட்டையை பூஜை அறையில் வைத்து பணம் விரையம் ஆகாமல் இருக்க வேண்டும்… பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு வீட்டில் பணம் வைக்கும் பெட்டி அல்லது பீரோ… நீங்கள் எங்கு பணம் வைப்பீர்களோ அந்த இடத்தில் வைக்கவும். இதை அடுத்த வெள்ளிக்கிழமையில் எடுத்து விட்டு மீண்டும் அதேபோல் புதிய மூட்டையை அங்கு வைக்கவும்.

இவ்வாறு தொடர்ந்து 9 வெள்ளிக்கிழமை செய்து வந்தால் பணம் வீண் விரையம் ஆகாமல்.. அதன் வரவு அதிகரிக்கும்.