காலிபோர்னியாவின் பாம் ஸ்பிரிங்ஸில் கோசெல்லா இசைவிழா நடைபெற இருந்த நேரத்தில் பிரபல பாடகர் ஜஸ்டின் பீபர் பத்திரிகையாளர்களுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நண்பர்களுடன் காபி ஷாப் வந்த பாடகர் ஜஸ்டின் பீபர் அங்கு வந்த புகைப்பட கலைஞர்களை பார்த்து மிகவும் கோபம் அடைந்து , இது நல்ல காலை ஆகவே இல்லை என சத்தமிட்டு இருக்கிறார். அதோடு மட்டுமல்லாது இவர் ஏற்கனவே அதிக கோபக்காரர் என்பதால் இவருடைய குடும்பத்திலும் நிறைய சிக்கல்கள் இருப்பதாகவும் திருமண வாழ்க்கையிலும் பொது இடங்களிலும் கோபத்தால் இவர் நிறைய இழந்துள்ளார் என்றும் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோன்று தன்னுடைய கோவத்தை கட்டுப்படுத்த முடியாத பாடகர் காபி ஷாப் வந்த இடத்தில் புகைப்பட கலைஞர்களையும் பத்திரிகையாளர்களையும் கண்டு, உங்களுக்கு பணம் பணம் பணம் மட்டும்தான் தெரியுமா ? மனிதர்களை நிம்மதியாக இருக்க விடுங்கள் என்பது போல சத்தமிட்டு கூறிவிட்டு காபி ஷாப் உள்ளே தன் நண்பர்களுடன் சென்று இருப்பது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
இதற்கு அவருடைய ரசிகர்கள் பலரும் பொதுவெளியில் ஏன் இவ்வாறு கோவப்பட வேண்டும் என்றும் கோபத்தை குறைத்துக் கொள்ளவில்லை என்றால் அதனுடைய பின்பு விளைவுகள் பலவாறு இருக்கும் என்றும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பாடகர் என்னுடைய இந்த செயலானது ரசிகர்களை கலக்கமடைய செய்திருக்கிறது. அதிலும் குறிப்பாக அந்த நேரத்தில் அவர் அணிந்திருந்த ஷூ டீ ஷர்ட் போன்றவை தற்போது மிக வேகமாக ட்ரெண்ட் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.