SBI கணக்குகளில் திருடப்படும் பணம்!! SBI வாடிக்கையாளர்களுக்கு இந்திய அரசு கொடுத்த புதிய எச்சரிக்கை!!

Photo of author

By Gayathri

இந்தியாவில் உள்ள 50 கோடிக்கும் மேற்பட்ட எஸ்பிஐ பயனாளர்களுக்கு இந்திய அரசாங்கம் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

உங்களிடம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் அக்கவுண்ட் இருக்கிறது என்றால் உடனே உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் உங்களுடைய வங்கிக் கணக்கில் உள்ள பணம் திருடு போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதனை இந்த பதிவில் காண்போம்.

இந்தியாவில் தற்போது புதிய வகை ஸ்கேம் மூலம் SBI வங்கி வாடிக்கையாளர்களின் பணம் திருடப்படுகிறது. மேலும், இந்தியாவைப் பொறுத்தவரையில் எஸ்பிஐ வங்கி 50 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட மிகப் பெரிய வங்கியாக திகழ்ந்து வருகிறது. இந்த வங்கிக்கு என்று 22,500 வங்கி கிளைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவை மட்டுமின்றி நம்முடைய அன்றாட தேவைக்கு நாம் பயன்படுத்தும் ஏடிஎம் – கள் 63, 580 ஆக உள்ளது.ADWM கிளைகளை கொண்டுள்ளது மற்றும் 82900 BC அவுட்லெட்களை இந்த வங்கி கொண்டுள்ளது குறிப்பிடுத்தக்கது.

தற்போது, இந்தியாவில் அதிகமாக எஸ்பிஐ வாடிக்கையாளர்களை குறி வைத்து சில மோசமான நிகழ்வுகள் நடக்கின்றன.சமீபத்தில் வெளியான பிஐபி (PIB) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பிரஸ் இன்ஃபர்மேஷன் பியூரோ (Press Information Bureau) தகவலின் படி, இந்தியன் ஸ்டேட் பேங்க் (எஸ்.பி.ஐ) வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு ரிவார்டு பாயிண்ட்ஸ் என்ற பெயரில் ஒரு புதிய மோசடியை மோசடிக்காரர்கள் அரங்கேற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

எஸ்.பி.ஐ.யின் நற்பெயரையும் பிராண்டிங்கையும் பயன்படுத்தி, நம்பகமான சேவைகளை மிகவும் நெருக்கமாகப் பிரதிபலிக்கும் போலி வலைத்தளங்கள் அல்லது பயன்பாடுகளை உருவாக்குகிறார்கள். இந்த போலி தளங்களை அசல் தளம் என நம்பி, பல SBI வாடிக்கையாளர்கள் அறியாமல் அதிகமாக மோசடி வலையில் சிக்கி பாதிக்கப்படுகிறார்கள். சமீபத்திய ஆண்டுகளில் இத்தகைய ஆன்லைன் மோசடியில் சிக்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Google Play Store அல்லது Apple App Store போன்ற நம்பகமான தளங்களிலிருந்து மட்டுமே எஸ்.பி.ஐ. தொடர்பான பயன்பாடுகளை நிறுவ வேண்டும் என்று வங்கியும், அரசாங்கமும் எச்சரித்துள்ளது. அதிகாரப்பூர்வமான SBI ரிவார்டுகளை பெற, வாடிக்கையாளர்கள் அதிகாரப்பூர்வ எஸ்.பி.ஐ. ரீவார்ட்ஸ் வலைத்தளத்தில் பயன்படுத்த வேண்டும் அல்லது 1800-209-8500 என்ற எண்ணில் சரிபார்க்கப்பட்ட எஸ்.பி.ஐ. ரீவார்ட்ஸ் வாடிக்கையாளர் சேவைக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்று இந்திய அரசு எஸ்பிஐ வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.