மெட்ரோ ரயிலில் யாரையும் தொந்தரவு செய்யாமல் வேடிக்கை பார்த்து பயணித்த குரங்கு!

Photo of author

By Kowsalya

தற்போது ஊரடங்கு முடிந்து மெட்ரோ ரயிலில் பயணிகள் பயணிக்க அனுமதி அளித்த பிறகு இப்பொழுது குரங்கு கூட மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆரம்பித்து விட்டது. டெல்லியில் மெட்ரோவில் பயணிக்கும் தொல்லையும் கொடுக்காமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டே பயணித்த குரங்கின் வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

டில்லியில் மெட்ரோ ரயிலில் குரங்கு ஒன்று சுற்றி திரிந்து உள்ளது. அதை பயணி ஒருவர் வீடியோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி அந்த பதிவில் ஆனந்தி பிஹாரில் இருந்த மெட்ரோவில் குரங்கு நுழைந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலை ட்விட்டர் மூலமாக மெட்ரோ நிர்வாகம் தொடர்பு கொண்டு எந்த ஒரு பயணியும் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க தகவலை சேகரித்து சென்று குரங்கை பார்த்தபொழுது குரங்கு இல்லை.

வீடியோவில் தவறுதலாக குரங்கு நுழைந்த விட்டதாகவும், தான் வேகமாக பயணிப்பதை பார்த்து அதுவே பதற்றமாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தது. ஆனால் யாரையும் அதை காயப்படுத்தவோ, தொல்லை கொடுக்கவோ இல்லை, அதே போல் அந்த பயணிகளும் குரங்கை விரட்டவில்லை, காயப்படுத்தவில்லை பதிலாகக் குரங்கு செய்து கொண்டிருந்ததை அனைவரும் ரசித்து கொண்டிருந்தனர் என்று தெரிவித்துள்ளனர்.

https://twitter.com/Paramjitdhillon/status/1406466878621421572?s=20