கணவனை இழந்த பெண்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை!! விண்ணப்பிப்பது எப்படி??

0
151
Monthly allowance for widows!! How to apply??
Monthly allowance for widows!! How to apply??

கணவனை இழந்த பெண்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை!! விண்ணப்பிப்பது எப்படி??

கணவரை இழந்த பெண்களுக்கு உதவித்தொகையை வழங்கும் திட்டத்தை டெல்லி அரசானது முதல் முறையாக கொண்டு வந்துள்ளது.

அதாவது, கணவரை பிரிந்து வாழும் பெண்கள், விவாகரத்து பெற்று தனியாக வசிக்கும் பெண்கள், பதினெட்டு வயது முதல் 59  வயது வரை உள்ள விதவை பெண்கள் மற்றும் ஏழைப் பெண்களுக்கான பென்ஷன் வழங்கும் திட்டத்தை டெல்லி அரசாங்கம் அறிமுகப்படுத்தி உள்ளது.

கணவரை இழந்து இவ்வாறு தனியாக வாழும் பெண்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு மாதமும் தகுதியான பெண்களுக்கு ரூபாய் இரண்டு ஆயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த திட்டம் டெல்லியில் வசிப்பவருக்கு மட்டுமே பொருந்தும். மேலும், இந்த திட்டத்தை பெற அவரிகளின் வருட வருமானம் ரூபாய் ஒரு லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

வங்கியில் ஆதார் எண்ணை இணைத்து அதில் ஒரு வங்கி கணக்கை விண்ணப்பதாரர்கள் தொடர்ந்திருக்க வேண்டும். இதற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு இ- டிஸ்ட்ரிக்ட் போர்டலுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். அதாவது https://edistrict.delhigovt.nic.in/  என்ற இணையதளத்திற்கு சென்று அதில் ஆவணத்தை தேர்ந்தெடுத்து, ஆதார் மற்றும் வாக்காளர் ஐடியைக் கிளிக் செய்ய வேண்டும்.

இதனுள் உங்களின் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை போடா வேண்டும். பிறகு கேப்ட்சாவை டைப் செய்து சமர்பிக்க வேண்டும்.

Previous articleஇன்று கலைஞரின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள்!! அமைதி பேரணி!! 
Next articleஇரயில் நிலையத்தில் வாலிபர் ஓட ஓட வெட்டிக் கொலை… கும்பல் செய்த வெறிச்செயல்… அரக்கோணத்தில் பரபரப்பு!!