மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை!! உடனடியாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளுங்கள்!!
தமிழகத்தில் உள்ள மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து முன்னூறு இடங்கள் இளங்கலை பட்டப்படிப்பிற்கு உள்ளது.
இந்த இடங்களை பூர்த்தி செய்ய கலந்தாய்வு நடத்தி அதன் பிறகுதான் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். மீதமுள்ள காலி இடங்களுக்கு நேரடி கலந்தாய்வு மூலமாக மாணவ மாணவிகளை கல்லூரிக்கு அழைத்து மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
இதுவரை ஒரு லட்சத்து ஆயிரத்து 416 இடங்கள் நிரம்பியுள்ளது. இதில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் சேர்ந்துள்ளனர். அரசு பள்ளியில் படித்துவிட்டு உயர்கல்வியில் பயிலும் மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்படி ஒவ்வொரு மாதமும் மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த புதுமைப்பெண் திட்டத்தில் மொத்தம் மூன்று லட்சத்து பத்தாயிரம் மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள்.
எனவே, இந்த ஆண்டு அரசு பள்ளியில் படித்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 608 ஆக உள்ளது.
எனவே, இவர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை பெற தேவையான தகுதிகளாவன,
ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று தற்போது கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டம் முதல்வர் முக.ஸ்டாலினால் கடந்த 2022 ஆண்டு துவங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க மாணவிகள் அனைவரும் https://penkalvi.tn.gov.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று பதிவு செய்ய வேண்டும்.
பிறகு மாணவிகளுக்கு இந்த தொகை அவர்களது வங்கி கணக்கில் போடப்படும். இந்த ஆண்டு மொத்தம் 27 ஆயிரம் மாணவிகள் பயனடைய இருக்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.