திருக்கோயில்களில் பயிலும் பயிற்சி மாணவர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை!! தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை!!

0
139
Monthly incentive for trainees studying in temples!! Tamil Nadu Government Released Report!!
Monthly incentive for trainees studying in temples!! Tamil Nadu Government Released Report!!

திருக்கோயில்களில் பயிலும் பயிற்சி மாணவர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை!! தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை!!

அனைத்து  மாநில அரசுகளும்  பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. மற்ற மாநில அரசுகளும் பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை  அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை நடைமுறைபடுத்தி வருகிறது. மேலும் மாணவர்கள் கல்வியை பாதியில் விடாமல் தடுக்க பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் சாரிபில் ஓதுவார், தவில் , நாதஸ்வரம், பிரபந்த வின்ணப்பர், அர்ச்சகர், வேத ஆகம பாடாசாலை போன்ற 15 பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த பயிற்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உணவு, சீருடை, உறைவிட வசதிகளுடன் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் இலவச பயிற்சியும் ஊக்கத்தொகை மாதம் ஒன்றுக்கு ரூபாய் 3000 மற்றும் பகுதி நேரத்திலும் பயிலும் மாணவர்களுக்கு மாத ஊக்கத்தொகை ரூபாய் 1500 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜூன் மாதம் முதல் கோயில்கள் சார்ப்பில் நடத்தப்படும் அனைத்து பயிற்சியின் முழு நேரம்  பயலும் மாணவர்களுக்கு 3000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. அது தற்போது உயர்த்தப்பட்டு 4000 ரூபாயாக அதிகரித்து வழங்கப்பட உள்ளது. பகுதி நேரம் பயிற்சி பெரும் மாணவர்களுக்கு 2000 ஆகவும் உயர்த்தி வழங்கப்பட உள்ளது என்று அரசானையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Previous articleஜம்மு காஷ்மீரில் சீரற்ற வானிலை யாத்திரை தற்காலிக நிறுத்தமா? ஆலய அதிகாரிகள் வெளியிட்ட தகவல்!!
Next articleபொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! ஞாயிற்றுக்கிழமையும்  அனைத்து ரேசன் கடை  இயங்கும் தமிழக அரசு அதிரடி!!