“மூலிகை டீ ” தலைவலி, இருமல், ஜுரம், உடல் பருமன் குறையும்!

Photo of author

By Kowsalya

மூலிகை டீ அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியுமா? மூலிகை டீ குடிப்பதனால் இருமல் மற்றும் ஜுரம், தலைவலி, சளி ஆகியவை நீங்கும். மேலும் இதை குடித்து வருவதால் உடலுக்கு புத்துணர்ச்சி தந்து உடலை மிகவும் ஆக்டிவாக வைத்திருக்கும்.

தேவையான பொருட்கள்:

1. டீ தூள்
2. ஏலக்காய்
3. சுக்கு
4. கற்பூரவள்ளி

செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.
2. அதில் மூன்று டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும்.
3. தண்ணீர் கொதித்தவுடன் 3 ஸ்பூன் அளவிற்கு டீ தூள் போடவும்.
4. 4 ஏலக்காய் போடவும்.
5. பின் ஒரு ஸ்பூன் அளவிற்கு சுக்கு போடவும்.
6. சுக்கு இல்லை என்றால் துருவிய இஞ்சியை சேர்த்துக் கொள்ளலாம்.
7. இரண்டு கற்பூரவள்ளி இலையை எடுத்து கழுவி விட்டு ஒன்று இரண்டாக உண்டாக்கி டீயில் போடவும்.
8. நாட்டுச் சர்க்கரை அல்லது பனைவெல்லம் தேவையான அளவிற்கு போட்டுக் கொள்ளவும்.
9. நன்கு கொதிக்க விட்டு பின் அடுப்பை அணைத்து விடவும்.
10. இதை எப்பொழுது வேண்டுமானாலும் குடிக்கலாம்.

இதில் உள்ள மூலிகை பொருட்கள் சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் ஜுரம், தலைவலி, சளி ஆகியவை கண்டிப்பாக நொடியில் பறந்துவிடும்.