இந்தியாவை கௌரவப்படுத்தும் விதத்தில் சர்வதேச அரங்கில் பிரபல நடிகருக்கு கிடைத்த மூன்று விருதுகள்!!!

Photo of author

By Parthipan K

 

இயல்பான  முகபாவனையும்,  எதார்த்தமான நடிப்பினால் தமிழ் மற்றும் மலையாளத்தில் சிறந்த நடிகராக திகழும்  நிவின்  பால், இவர் மிரட்டலான நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான   “மூத்தோன்” திரைப்படத்திற்குமலையாள ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மொழி ரசிகர்கள் இடமே பெரும் வரவேற்பை பெற்றது.

நடிகையும் இயக்குனருமான கீது மோகன்தாஸ் இயக்கியிருந்த இந்த திரைப்படம் சமீபத்தில் நியூயார்க் இந்தியன் பிலிம் பெஸ்டிவல் விழாவில் திரையிடப்பட்டு உலக அரங்கில் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த குழந்தை நட்சத்திரம் என ஒரே திரைப்படத்தில் 3  விருதுகளையுமே தட்டிச்சென்றது. மேலும் மூத்தோன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சஞ்சனா திபு சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படம் ஏற்கனவே இந்தியாவில் பல விருதுகளையும் பாராட்டுகளையும் என்று தனி சிறப்பு பெற்று வந்த நிலையில் தற்போது சர்வதேச அளவிலும் மூன்று விருதுகளை வென்று இந்தியாவின் பெருமையை மீண்டும் நிலைநாட்டியுள்ளது.

இதற்கு முன் இந்தியாவில் பல்வேறு விருதுகளை பெற்றிருந்தாலும் சர்வதேச அளவில் நிவின் பாலி பெற்ற முதல் விருது இதுவேயாகும். சர்வதேச அளவில் பெரிதும் பேசப்படும் இந்த படத்திற்கு கிடைத்த 3 விருதுகளுக்காக, குழுவினருக்கு திரையுலகமே வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.