பணியின் போது விபத்தில் சிக்கியவருக்கு சிகிச்சை செலவை அரசே ஏற்கும்:!! முதல்வர் பழனிசாமி அசத்தல்!

0
63

நெல்லை மாவட்டத்தில் விபத்தில் சிக்கிய தூய்மைப் பணியாளருக்கு மருத்துவமனை சிகிச்சை செலவு முழுவதும் அரசு ஏற்றுக்கொள்ளும் முதல்வர் பழனிசாமி அவர்கள் அறிவிப்பு.

நெல்லை மாவட்டம்
கீழவீரராகவபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவர் சுய உதவி குழுவின் மூலமாக சென்னை மாநகராட்சியில்
மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட நுண் உரங்களை தயாரிப்பில் மக்கும் குப்பைகளை பிரித்து போடும் பணிசெய்து வருகிறார்.கடந்த செவ்வாய்க்கிழமை அன்று எதிர்பாராதவிதமாக அவர் வேலை செய்யும் பொழுது இயந்திரத்தில் கை சிக்கி கை முற்றிலும் சிதைந்து விட்டது.

உடனே அந்த அம்மாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.இந்த செய்தியை அறிந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அவருக்கு தீவிர உயர் சிகிச்சை அளிக்க நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டும்,பாக்கிய லட்சுமியின் குடும்ப சூழ்நிலையை கருத்தில்கொண்டு அவரது மருத்துவ செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என்றும், இழப்பீடு தொகையாக பாக்கியலட்சுமி குடும்பத்திற்கு பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

author avatar
Pavithra