நெருங்கிவரும் தேர்தல் அதிரடி சரவெடி அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்! வியப்பில் எதிர்க்கட்சிகள்!

Photo of author

By Sakthi

சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால் ,எல்லா அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல திட்டங்களை அறிவித்து அதனை தொடங்கி வைத்தும் வருகின்றார்.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கபிலர்மலை பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். இந்த சமயத்தில் அவர் மக்களிடையே உரையாற்றி இருக்கிறார்.

அங்கே அவர் உரையாற்றியதாவது, சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் நாட்டிலேயே தமிழகம் தான் முதன்மை வகிக்கிறது. மக்களுக்கு சேவை ஆற்றிய தலைவர்களுக்கு மணிமண்டபம் மற்றும் சிலைகள் அமைத்து வருகின்றோம் அந்த விதத்தில் அல்லாள இளைய நாயக்கருக்கும் விரைவாக சிலை திறக்க இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டிலே வீடுகள் அற்ற ஏழை எளிய மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். எத்தனை வீடுகள் வேண்டுமானாலும் கட்டித்தரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்து இருக்கிறார் என்று அதிரடியாக தெரிவித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர் தேர்தல் சமயத்தில் மக்கள் மனம் மகிழ இன்னும் எண்ணற்ற அறிவிப்புகள் வெளிவரும் என்று தெரிவித்தார். அதோடு விவசாயிகள் வளம் பெறுவதற்காக நம்முடைய அரசு எப்போதும் துணை நிற்கும் என்று தெரிவித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.