தமிழ்நாட்டில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் இந்த புதிய வகையிலான நோய்த்தொற்று கட்டுக்குள் வந்ததாக தெரியவில்லை.இதனை அடுத்து இந்த தொற்றை கட்டுப்படுத்த மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது.
இந்தியாவை பொறுத்தவரையில் இந்த வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேற அதிவேகத்தில் தன்னுடைய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. நாள்தோறும் இந்த தொற்றின் பாதிப்பு மூன்று லட்சத்தை கடந்து வருகிறது. அதேபோல் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை பத்துமணி அளவில் அனைத்து மாநில முதல்வர்களுடனும் காணொளி மூலம் கலந்துரையாடினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு சார்பாக தலைமைச்செயலாளர் ராஜிவ் ரஞ்சன், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தநிலையில், நேற்று மாலையில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், அரசு ஆலோசகர் சண்முகம் டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் இருக்கின்ற முதலமைச்சர் இல்லத்திற்கு சென்று முதல்வரை சந்தித்து உரையாடி இருக்கிறார்கள்.
அந்த சமயத்தில் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கு பிரதமர் மோடியுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் தொடர்பாகவும், பிரதமர் அளித்த ஆலோசனைகள் தொடர்பாகவும், முதல்வர் எடப்பாடி இடம் அதிகாரிகள் இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடன் இன்று பிற்பகல் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் போன்ற உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது என்று சொல்லப்படுகிறது.
இந்த ஆலோசனைக்கு பிறகு இரவு நேர ஊரடங்கு நேர மாற்றம், அதோடு ஞாயிறு மட்டும் அல்லாமல் மேலும் சில நாட்களில் முழு ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தளர்வுகளில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. புதிய கட்டுப்பாடுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.