ரூ.1000க்கு மேல் மின் கட்டணம் வந்தால் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்! மின்சாரவாரியம் புதிய உத்தரவு!
தமிழகத்தில் மின் கட்டணங்கள், மின்வாரிய அலுவகங்கள் மற்றும் ஆன்லைனில் வசூல் செய்யப்பட்டு வருவது குறிபிடத்தக்கது.இதில் மின் கட்டணம் ரூ. 5 ஆயிரத்துக்கும் மேல் இருந்தால் அதை மின்சாரவாரிய அலுவகங்கள் அல்லது ஆன்லைன் அல்லது வங்கி காசோலைகளில் அல்லது வரைவோலைகளில் செலுத்துவது நடைமுறையில் உள்ளது.
இதற்கிடையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய சில மாற்றங்களை முன்மொழிந்துள்ளது. அதாவது இனிமேல் இருமாத மின் பயன்பாடு 372 யூனிட்டுகளை (ரூ.1003.50) தாண்டிய வீட்டு உபயோக பயனர், மின்சாரவாரிய அலுவலக கவுண்டர்களில் மின் கட்டணம் செலுத்த அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகள் நடைமுறைக்கு வரும் பச்சத்தில் வீட்டு உபயோக பயனர் மின் கட்டணம் ரூ. 1000க்கு மேல் இருந்தால் அதை மின்சாரவாரிய அலுவகங்களில் செலுத்த அனுமதியில்லை, மேலும் ஆன்லைன் அல்லது வங்கி காசோலைகளில் அல்லது வரைவோலைகளில் மட்டும்தான் மின் கட்டணம் செலுத்த முடியும்.
இதுகுறித்து மின்சாரவாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது “ஆன்லைன் செயல்முறை எளிதாக்குவதால், மக்கள் வரிசையில் காத்திருந்து மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படாது என்று கூறினார்.
ஆன்லைன்னை பயன்படுத்த முடியாத மக்கள் மின்சாரவாரிய அலுவலக கவுண்டர்களுக்கு வருகின்றனர் என்றார். இந்த நடைமுறை முன்மொழிய காரணமே மின்சாரவாரிய அலுவலகங்களில் கவுண்டர் ஊழியர்களையும், கவுண்டர்களின் எண்ணிக்கையையும் குறைப்பதே இந்நடவடிக்கையின் நோக்கம் என்று கூறப்படுகிறது.
மேலும் மின்சாரவாரிய அலுவலகங்களில் பல பிரிவுகள் இருந்தாலும் ஒரு கட்டிடத்தில் ஒரே ஒரு கவுண்டர் மட்டுமே இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.