இரும்புச்சத்தை அதிகரிக்கும் முருங்கை!! இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க!!

Photo of author

By Gayathri

டீன் ஏஜ் குலந்திகளுக்கு இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை கொடுக்க வேண்டியது அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.இரும்புச்சத்து குறைபாட்டால் இரத்த சோகை,உடல் சோர்வு மற்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகிறது.

இரும்புச்சத்து நிறைந்த உணவுகள குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டியது முக்கியம்.முருங்கை கீரையில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது.முருங்கை விரும்பாத குழந்தைகளை சாப்பிட வைக்கும் ட்ரிக் சொல்லப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

1)முருங்கை கீரை – இரண்டு தேக்கரண்டி
2)கோதுமை மாவு – கால் கப்
3)உப்பு – தேவையான அளவு
4)எண்ணெய் – அரை தேக்கரண்டி
5)நெய் – ஒரு தேக்கரண்டி
6)தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:

முதலில் இரண்டு தேக்கரண்டி அளவு ,முருங்கை கீரையை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு இதை பொடியாக நறுக்கி ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்க்கவும்.

அடுத்து அதில் கால் கப் அளவிற்கு கோதுமை மாவை சேர்க்க வேண்டும்.முழு கோதுமையை காயவைத்து மாவாக எடுத்துக் கொண்டால் நல்லது.கடைகளில் விற்கும் கோதுமை மாவை பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

கால் அளவிற்கு அரைத்த கோதுமை மாவை முருங்கை கீரையில் சேர்த்ததும் கைகளால் நன்கு கலந்து விடவும்.பிறகு அதில் அரை தேக்கரண்டி எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிடவும்.

குழநதைகள் விருப்பப்பட்டால் சீரகம்,கறிவேப்பிலை,மல்லித்தழை போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

இந்த மாவை அரை மணி நேரத்திற்கு ஊறவைத்து பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.அதன் பிறகு சப்பாத்தி போல் உருட்டி தோசைக்கல்லில் போட்டு நெய் சேர்த்து சுட்டெடுக்கவும்.

முருங்கை கீரை விரும்பாத குழந்தைகளுக்கு இதுபோன்று சப்பாத்தி செய்து கொடுத்தால் இன்னும் வேண்டுமென்று கேட்டு வாங்கி உண்பார்கள்.